விருதுநகரில் வீட்டிற்கு முன்பு நிறுத்தியிருந்த 9 பைக்குகளுக்கு தீ வைப்பு: மர்ம நபரிடம் போலீஸார் விசாரணை
விருதுநகரில் வீடுகளுக்கு முன்பு நிறுத்தியிருந்த 9 இருசக்கர வாகனங்களுக்கு புதன்கிழமை அதிகாலையில் மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் அருகே மாங்ககுடோன் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன்(40). இவர் சமத்துவ மக்கள் கட்சியின் நகரச்
விருதுநகரில் வீடுகளுக்கு முன்பு நிறுத்தியிருந்த 9 இருசக்கர வாகனங்களுக்கு புதன்கிழமை அதிகாலையில் மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் அருகே மாங்ககுடோன் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன்(40). இவர் சமத்துவ மக்கள் கட்சியின் நகரச் செயலாளராக இருந்து வருகிறார். இவர் வீட்டிற்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்திற்கு அதிகாலையில் யாரோ மர்ம நபர் பெட்ரோல் தீ வைத்துள்ளார். இதில், பைக் முழுவதும் எரிந்து வீட்டுச் ஜன்னல் சேதம் அடைந்தது.
இதேபோல், புதுத்தெரு, குப்புச்சாமி கொத்தனார் தெரு, கசாப்புக்காரர் தெரு, கிழக்குத் தெரு, மேற்கு தெரு உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த பைக்குகளுக்கு தீ வைத்ததில் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இந்நிலையில் வீட்டிற்கு முன்பு தீ எரிவதை காலையில் நடைபயிற்சிக்கு சென்றவர்கள் பார்த்துள்ளனர். அப்போது வாகனம் தீயில் எரிந்து கொண்டிருந்ததை பார்த்து வீடுகளில் உள்ளவர்களை சத்தம் கொடுத்து எழுப்பியுள்ளனர்.
அப்போது, பொதுமக்களை பார்த்ததும் மர்ம நபர் கையில் பெட்ரோல் பாட்டிலுடன் தப்பி ஓட முயற்சி செய்தவரை சுற்றி வளைத்து பிடித்து விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக மர்ம நபரிடம் விசாரணை செய்ததில் புதுத்தெருவைச் சேர்ந்த கமல் என்ற கண்ணன்(30) என்பது தெரியவந்தது. இவர் மனோநிலை பாதித்தவர் என்பது விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக சமத்துவ மக்கள் கட்சியின் நகர செயலாளர் முருகேசன் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். அதிகாலையில் ஒவ்வொரு தெருத் தெருவாக சென்று பைக்குகளுக்கு தீ வைத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.
Advertisement
இலங்கை மத்திய வங்கியின் புள்ளிவிபரங்களின்படி, 2013ஆம் ஆண்டு இலங்கையின் மொத்த ஏற்றுமதி தொகை ஆயிரத்து 39 கோடி அமெரிக்க டாலரை எட்டியது. அது கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட 6.3 விழுக்காடு அதிகமாகும். அதில், வேளாண் உற்பத்திப் பொருட்கள் மற்றும் தொழிற்துறை உற்பத்திப் பொருட்களின் மொத்த ஏற்றுமதி தொகை, கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட முறையே 10.7 மற்றும் 5 விழுக்காடு அதிகமாகும் என்று இலங்கையின் கொழும்பு பக்கம் என்னும் இணைய தளம் அண்மையில் தெரிவித்தது.
மேலும், 2013ஆம் ஆண்டு, இலங்கையின் மொத்த இறக்குமதி தொகை, ஆயிரத்து எண்ணூறு கோடி அமெரிக்க டாலரை எட்டியது. அது கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட 6.5 விழுக்காடு குறைவாமென என்று தெரியவருகிறது.