சிதம்பரத்தில் அஞ்சல் ஊழியர் சங்கத்தினரின் வேலைநிறுத்த கண்டன ஆர்ப்பாட்டம்!
ஏழாவது ஊதியக்குழுவை 1-1-2014 முதல் அமைக்க வேண்டும், 50 சதவீத டிஏவை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும், இடைக்கால நிவாரணம் உடன் வழங்க வேண்டும், அனைத்து
அனைத்து அஞ்சல் ஊழியர் சங்கத்தின் சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரம் தலைமை தபால் நிலையத்தில் பிப்.12,13 ஆகிய இருநாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஏழாவது ஊதியக்குழுவை 1-1-2014 முதல் அமைக்க வேண்டும், 50 சதவீத டிஏவை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும், இடைக்கால நிவாரணம் உடன் வழங்க வேண்டும், அனைத்து ஊழியர்களுக்கு ஐந்து கட்ட பதவி உயர்வு வழங்க வேண்டும், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியம் மாற்றி அமைக்கப்பட வேண்டும், புதிய ஓய்வூதிய திட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வேலைநிறுத்தத்தை முன்னிட்டு சிதம்பரம் வடக்குவீதி தலைமை தபால் நிலையம் முன்பு அஞ்சலக ஊழியர் சங்கத்தினர் வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு கடலூர் கோட்ட செயலாளர் பி.ரவி தலைமை வகித்தார். நிர்வாகிகள் கோ.தாமோதரன், பி.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போஸ்ட்மேன் சங்கத் தலைவர் ஆர்.குணசேகரன், நிர்வாகிகள் தினேஷ்குமார், தில்லைவேலன், ஜனார்த்தனம், செங்கல்வராயன், சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். எம்.செல்வம் நன்றி கூறினார்.