முகப்பு
தற்போதைய செய்திகள்

பட்ஜெட்: தமிழக முதல்வருக்கு மக்கள் சக்தி இயக்கம் பாராட்டு!

இதுகுறித்து மக்கள் சக்தி இயக்க மாநிலத் தலைவர் முனைவர் ஏ.சண்முகம் தெரிவித்தது: தமிழக ஆளுநர் கடந்த பிப்.1-ம் தேதி சட்டப்பேரவையில் ஆற்றிய உரையின் போது தமிழகஅரசு, தமிழக நதிகளை

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:24 AM
பகிர்:

தமிழக பட்ஜெட்டில் நதிகள் இணைப்பிற்கு நிதி ஒதுக்கீடு செய்த  முதல்வர் ஜெயலலிதாவிற்கு மக்கள் சக்தி இயக்கம் பாராட்டும், நன்றியும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மக்கள் சக்தி இயக்க மாநிலத் தலைவர் முனைவர் ஏ.சண்முகம் தெரிவித்தது: தமிழக ஆளுநர் கடந்த பிப்.1-ம் தேதி சட்டப்பேரவையில் ஆற்றிய உரையின் போது தமிழகஅரசு, தமிழக நதிகளை இணைக்கும் திட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, தமிழகஅரசு நிதியிலேயே அமல்படுத்தும் என தெரிவித்தார். அதோடுவிட்டுவிடாமல், அதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தமிழகஅரசு 2014-15 பட்ஜெட்டில் நதிகள் இணைப்பிற்காக ரூ 119.98 கோடி நிதியை ஒதுக்கியுள்ளதற்கும், பல்கலைக்கழகங்களுக்கென மானியமாக ரூ 979.32 கோடி நிதி ஒதுக்கீடு செய்ததற்கும் தமிழக முதல்வருக்கு நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறோம் என முனைவர் ஏ.சண்முகம் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.