முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் தபால் நிலையத்தில் இ-போஸ்ட் தொடக்கம்

சிதம்பரம் வடக்குவீதி தலைமை தபால் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை முதல் இ-போஸ்ட் தபால் அனுப்பும் முறை தொடங்கப்பட்டுள்ளது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:26 AM
பகிர்:

இந்தியா முழுசிதம்பரம் வடக்குவீதி தலைமை தபால் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை முதல் இ-போஸ்ட் தபால் அனுப்பும் முறை தொடங்கப்பட்டுள்ளது.

வதும் தபால் நிலையங்களில் தபால்கள் தாமதத்தை தவிர்க்க இ.போஸ்ட் முறையை அமல்படுத்தியது. நீண்ட நாட்களாகியும் சிதம்பரம் தலைமை தபால் நிலையத்தில் இ.போஸ்ட் முறை தொடங்கப்படாமல் இருந்தது. இதுகுறித்து பாரதிய ஜனதா கட்சி மாவட்ட பொருளாளர் வி.ராஜரத்தினம் தலைமை தபால் அதிகாரியை தொடர்பு கொண்டு முறையிட்டார். இதனையடுத்து சிதம்பரம் வடக்குவீதி தலைமை தபால் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை முதல் இ.போஸ்ட் முறையில் தபால் அனுப்பும் முறை தொடங்கப்பட்டது. ஏ-4 பக்கத்தில் ஒருபக்கத்தில் கடிதம் அனுப்ப ரூ.10 வசூலிக்கப்படுகிறது. இ.போஸ்ட் மூலம் அனுப்பப்படும் தபால் அனுப்பப்படும் ஊரில் உள்ள தபால் நிலையத்திற்கு அனுப்பப்பட்டு, அங்கு கவர் போடப்பட்டு பெறுநர் முகவரிக்கு கொண்டு தபால் சேர்க்கப்படும் என ஒருங்கிணைப்பாளர் தண்டபாணி தெரிவித்தார். இதுகுறித்து விபரம் அறிந்து கொள்ள தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன்: தண்டபாணி -94888 10904

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.