பைக் மீது வேன் மோதிய விபத்தில் இளைஞர் சாவு
தேனி மாவட்டம், உத்தமபாளையத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார்(27). இவர் சிவகாசி பகுதியில் தங்கி ஜேசிபி வாகனத்தை வைத்து தனியார்களுக்கு வாடகைக்கு ஓட்டி வருகிறார். இந்நிலையில் புதன்கிழமை
விருதுநகர் அருகே பைக் மீது வேன் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
தேனி மாவட்டம், உத்தமபாளையத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார்(27). இவர் சிவகாசி பகுதியில் தங்கி ஜேசிபி வாகனத்தை வைத்து தனியார்களுக்கு வாடகைக்கு ஓட்டி வருகிறார். இந்நிலையில் புதன்கிழமை வேலை நடைபெறும் பகுதிகளை பார்வையிடுவதற்காக பைக்கில் சிவகாசியில் இருந்து விருதுநகருக்கு வந்தாராம். அப்போது, ஆமத்தூர் அருகே வரும் போது விருதுநகரிலிருந்து- சிவகாசி நோக்கிச் சென்ற வேன் எதிர்பாரத விதமாக பைக் மீது மோதியது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்து ரஞ்சித்குமார் உயிரிழந்தார். இது தொடர்பாக சிவகாசி அருகே சாமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த வேன் டிரைவர் விக்னேஷ்(24) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Advertisement