விருதுநகர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் எஸ்.வேலாயுதம் தலைமை வகித்தார். நகர தலைவர் பாப்கான் கார்த்திகேயன், மாவட்ட விவசாய அணிச்
விருதுநகர் மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி காங்கிரஸ் சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் எஸ்.வேலாயுதம் தலைமை வகித்தார். நகர தலைவர் பாப்கான் கார்த்திகேயன், மாவட்ட விவசாய அணிச் செயலாளர் சீனிச்சாமித்தேவர், மாவட்ட துணைத் தலைவர் ராஜலிங்கராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், தமிழகத்தில் இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிப்பதை தடுக்கும் வகையில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும். விருதுநகர் மாவட்டம் மழையில்லாமல் பயிர் கருதி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Advertisement
இந்த ஆர்ப்பாட்டத்தில் ராஜபாளையம் வட்டார தலைவர் செ.ராஜா, சுவகாசி வட்டார தலைவர் சுப்புராஜ், அருப்புக்கோட்டை நகர தலைவர் கனகவேல் உள்ளிட்ட கங்கிரஸ் கட்சியினர் மற்றும் கிளை நிர்வாகிகள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.