ராஜிவ் கொலையாளிகளை விடுவிக்கத்தடை: கரூரில் வழக்குரைஞர்கள் போராட்டம்
ராஜிவ் கொலையாளிகளை விடுவிக்கத்தடை விதித்ததை கண்டித்து கரூரில் வெள்ளிக்கிழமை வழக்குரைஞர்கள் சங்கத்தினர் தபால்நிலையத்தை முற்றுகையிட்டு
ராஜிவ் கொலையாளிகளை விடுவிக்கத்தடை விதித்ததை கண்டித்து கரூரில் வெள்ளிக்கிழமை வழக்குரைஞர்கள் சங்கத்தினர் தபால்நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் மாவட்ட வழக்குரைஞர்கள் வெள்ளிக்கிழமை நீதிமன்ற பணியை புறக்கணித்துவிட்டு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தபால்நிலையத்தை, சங்கத்தின் மாவட்டத்தலைவர் மாரப்பன் தலைமையில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வழக்குரைஞர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதுகுறிóத்து சங்கத்தலைவர் மாரப்பன் கூறுகையில், முல்லைப்பெரியாறு அணை பிரச்னையிலும், காவிரி நதிநீர் பங்கீடு பிரச்னையிலும், மீனவர் பிரச்னையிலும் மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தை புறக்கணித்து வருகிறது. இந்நிலையில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி, மாநில அரசின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்காதது கண்டிக்கத்தக்கது. இதற்காக தமிழகத்தில் உள்ள ஏழரை கோடி தமிழகர்கள் குரல் கொடுக்கும் நிலையில், அவர்களுக்கு ஆதரவாக 75,000 வழக்குரைஞர்களும் தொடர்ந்து குரல் கொடுப்போம் என்றார்.
Advertisement