சத்தியமூர்த்தி பவன் அருகே இருதரப்பினரிடையே கைகலப்பு; அடிதடி ரகளையால் சாலை ஸ்தம்பிப்பு
கி. வீரலட்சுமி என்பவர் தலைமையிலான தமிழர் முன்னேற்றப் படை இயக்கம் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் இன்று காலை தமிழக காங்கிரஸ் தலைமையகமான சத்திய மூர்த்தி பவனின் முன்னர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Updated On : 5 ஜனவரி, 2024 at 10:00 AM
கி. வீரலட்சுமி என்பவர் தலைமையிலான தமிழர் முன்னேற்றப் படை இயக்கம் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் இன்று காலை தமிழக காங்கிரஸ் தலைமையகமான சத்திய மூர்த்தி பவனின் முன்னர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இந்த அமைப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இருதரப்பும் மாறி மாறி கற்களை வீசித் தாக்கிக் கொண்டனர். அவர்களைக் கலைக்க போலீஸார் முயன்றனர். ஆனால் இருதரப்பும் அடிதடி ரகளையில் ஈடுபட்டதால், சென்னை அண்ணாசாலையிலும், திருவிக சாலையிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.