முகப்பு
தற்போதைய செய்திகள்

கூட்டணி குறித்து தேமுதிக அதிகாரபூர்வமாக யாருடனும் பேசவில்லை : கொறடா சந்திரகுமார்

தேமுதிகவின் கொறடா சந்திரகுமார் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசியபோது, தேமுதிகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டது குறித்து நாளிதழ்களில் வெளியாகும் செய்திகளுக்கு தேமுதிக பொறுப்பல்ல. தேமுதிக இதுவரை எந்த அரசியல் கட்சியுடனும்

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:31 AM
பகிர்:

தேமுதிகவின் கொறடா சந்திரகுமார் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசியபோது,

தேமுதிகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டது குறித்து நாளிதழ்களில் வெளியாகும் செய்திகளுக்கு தேமுதிக பொறுப்பல்ல. தேமுதிக இதுவரை எந்த அரசியல் கட்சியுடனும் அதிகாரபூர்வ பேச்சுவார்த்தைகளை நடத்தவில்லை.

பாஜக., திமுக., காங்கிரஸ் என மற்ற கட்சிகள்தான் எங்களைத் தொடர்பு கொண்டு பேசிவருகின்றன. ஆனால் நாங்கள் இதுவரை அதிகாரபூர்வமாக எந்தக் கட்சிகளுடனும் பேசவில்லை. நாங்கள் ஏதோ பேரம் பேசி வருவதாகக் கூறப்படுகிறது. இது தவறானது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளிநாடு சென்றிருக்கிறார். அவர் நாடு திரும்பியதும், தேமுதிகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்து அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.