தற்போதைய செய்திகள்

கேரளாவுக்கு கடத்த முயன்ற 225 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்: 2 பேர் கைது

புதுச்சேரியில் இருந்து கடலூர் வழியாக கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்ற 225 மூட்டை ரேஷன் அரிசியை போலீஸôர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கே.விஜயபாஸ்கா்

புதுச்சேரியில் இருந்து கடலூர் வழியாக கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்ற 225 மூட்டை ரேஷன் அரிசியை போலீஸôர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரியில் இருந்து கடலூர் வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தி செல்லப்படுவதாக கடலூர் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸôருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையில் எஸ்ஐ வெங்கடேசன் மற்றும் போலீஸார் மாவட்டத்தின் முக்கிய வாகன தணிக்கை செய்து வந்தனர்.

செவ்வாய்க்கிழமை இரவு பண்ருட்டி அங்குசெட்டிபாளையத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, அந்த வழியாக வந்த லாரி மற்றும் வேனை நிறுத்தி சோதனை செய்தனர். இரு வாகனங்களிலும் ஏராளமான அரிசி மூட்டைகள் இருப்பதும்,  சோதனையில் ரேஷன் அரிசி என்பது தெரியவந்தது.

ரேஷன் அரிசி இருப்பது தெரியாமல் இருப்பதற்காக வாகனங்களின் உள் பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகளை அடுக்கி அதன் மேல் பகுதியிலும், பக்கவாட்டு பகுதிகளிலும் பொன்னி புழுங்கல் அரிசி மூட்டைகளை அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அதிகாரிகளை ஏமாற்றுவதற்காக இதுபோன்ற நூதனமான முறையை கையாண்டு இருப்பது தெரியவந்தது. லாரியில் 101 மூட்டை ரேஷன் அரிசி, 40 மூட்டை பொன்னி புழுங்கல் அரிசியும், அதேபோல வேனில் 64 மூட்டை ரேஷன் அரிசியும், 20 மூட்டை பொன்னி புழுங்கல் அரிசியும் என மொத்தம் 225 மூட்டை இருந்தன. ஒவ்வொரு மூட்டையும் தலா 75 கிலோ எடை கொண்டது.

இதையடுத்து ரேஷன் அரிசியை கடத்தி வந்ததாக புதுச்சேரி மடுகரையை சேர்ந்த  கோவிந்தராஜூலு(36), பாலசந்தர்(27) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். ரேஷன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி, வேனையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியின் மதிப்பு ரூ.10 லட்சம் என கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருமணமான 8 மாதங்களில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

கணவா் இறந்த சோகத்தில் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை

நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் ’நாம்’ இயக்க மாநாட்டில் வலியுறுத்தல்

தில்லியில் காணாமல்போன 1,850 கைப்பேசிகள் மீட்பு

பழனியில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்

SCROLL FOR NEXT