தீக்குளித்த இளம்பெண்ணின் உடல் அடக்கம்: 4 பேர் மீது வழக்கு பதிவு
விருதுநகர் அருகே தீக்குளித்து உயிரிழந்த பெண்ணை உறவினர்களுக்கு தெரியாமல் அடக்கம் செய்த சம்பவம் தொடர்பாக பாண்டியன் நகர் போலீஸார் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து
விருதுநகர் அருகே தீக்குளித்து உயிரிழந்த பெண்ணை உறவினர்களுக்கு தெரியாமல் அடக்கம் செய்த சம்பவம் தொடர்பாக பாண்டியன் நகர் போலீஸார் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் அருகே பாண்டியன் நகரில் திரவியநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுரளி(26). இவரது மனைவி கலைவாணி(21) குடும்ப பிரச்னையின் காரணமாக கடந்த டிச-7ம் தேதி இரவில் தனக்கு தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.
இந்நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் உறவினர் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு உயிரிழந்தார். இது தொடர்பாக உறவினர்களுக்கு கூட தகவல் தெரிவிக்காமல் கலைவாணியின் சடலத்தை அடக்கம் செய்துள்ளனர்.
Advertisement
இது தொடர்பாக ரோசல்பட்டியைச் சேர்ந்த அப்பெண்ணின் தம்பி சேவியர்(21) என்பவர் பாண்டியன் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன் பேரில் கணவர் பாலமுரளி(26), அவரது தந்தை பொன்னுச்சாமி(54), உறவினர்களான குமார்(38)மற்றும் ராஜா(35) உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.