கேஸ் சிலிண்டர் விலை உயர்வு: மண் அடுப்புடன் பா.ஜ.கவினர் ஆர்ப்பாட்டம்
சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுவை மாநில பா.ஜ.கவினர் சனிக்கிழமை அண்ணா சாலையில் மண் அடுப்புகளுடன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுவை மாநில பா.ஜ.கவினர் சனிக்கிழமை அண்ணா சாலையில் மண் அடுப்புகளுடன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு ஏழை, நடுத்தர மக்களை பாதிக்கும் வகையில் சமையல் கேஸ் சிலிண்டர் விலையை ரூ.220 ஆக உயர்த்தி உள்ளது. இதனால் அனைத்து உணவுப் பொருள்கள் விலை கடுமையாக உயரும்.கூலித்தொழிலாளி மற்றும் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மாதம் ரூ.5 ஆயிரம் வரை ஊதியம் பெறுகின்றனர். இதில் ரூ.1250-ஐ கேஸ் சிலிண்டருக்கே செலவழிக்க வேண்டி உள்ளது. பல லட்சக்கணக்கான சிறிய ஓட்டல்கள், டீக்கடைகள்,
உணவு பொருள் தயாரிப்போர் வாழ்க்கை கடும் பாதிப்படையும். அவர்களின் தொழிலை மூடும் நிலைக்கு மத்திய அரசு தள்ளி உள்ளது. புதுச்சேரியில் ஆதார் அடையாள அட்டை 70 சதவீதம் மட்டுமே தரப்பட்டுள்ளது. அதிலும் பல்வேறு குறைபாடுகள் உள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான மக்களுக்கு
உங்கள் பணம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ் கேஸ் மானியமும் கிடைக்கவில்லை.இத்திட்டத்தை நிறுத்தி விட்டு பழைய விலைக்கே சிலிண்டர்களை வழங்க வேண்டும்.இப்பிரச்னையில் மாநில அரசு உடனே தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.கேஸ் சிலிண்டர் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி மண் அடுப்பு, விறகுகளுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் எஸ்.விஸ்வேஸ்வரன் தலைமை தாங்கினார்.
பொதுச் செயலாளர் ஆர்.வி.சாமிநாதன், மாநில இளைஞரணி தலைவர் சக்திவேல்,நிர்வாகிகள் தங்க விக்ரமன், பரந்தாமன், ஜெயந்திமாலா, கௌரிசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.