முகப்பு
தற்போதைய செய்திகள்

விருதுநகர் அருகே வெவ்வேறு இடங்களில் ரொக்கம், நகை திருட்டு

விருதுநகர் அருகே ஆர்.ஆர்.நகரைச் சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன்(40). இவர் நான்கு வழிச்சாலையோரத்தில் டீக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு

பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 9:38 AM

விருதுநகர் அருகே வெவ்வேறு இடங்களில் ரூ.4 ஆயிரம் ரொக்கம் மற்றும் 2 சவரன் நகை ஆகியவைகளை திருடிய மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

    விருதுநகர் அருகே ஆர்.ஆர்.நகரைச் சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன்(40). இவர் நான்கு வழிச்சாலையோரத்தில் டீக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு வழக்கம் போல் வியாபாரம் செய்து விட்டு கடையை மூடிவிட்டு இரவில் சென்றாராம். அதையடு்த்து சனிக்கிழமை காலையில் கடை திறப்பதற்காக சென்றுள்ளார். அங்கு கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

   அதையடுத்து, உள்ளே பார்க்கையில் கல்லாப்பெட்டியில் வைத்திருந்த ரூ.3 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக உடனே வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
         விருதுநகர் அருகே சூலக்கரை எம்.ஜி.ஆர்.நகரைச் சேர்ந்த பாலு என்பவரின் மனைவி அன்புச்செல்வி(42). இவர்கள் கடந்த 2-ம் தேதி உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் வெளியூருக்குச் சென்றார்களாம். அதையடுத்து, சனிக்கிழமை காலையில் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளனர். அங்கு வீட்டுக் கதவின் பூட்டு,  கொண்டி உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

Advertisement

பின்னர் உள்ளே சென்று பார்க்கையில் பீரோவில் இருந்த ரொக்கம் ரூ.1000 மற்றும் 2 சவரன் நகை ஆகியவைகளை யாரோ மர்ம நபர்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக அன்புச் செல்வி சூலக்கரை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து பூட்டை உடைத்து திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.