முகப்பு
தற்போதைய செய்திகள்

சங்கரன்கோவில் வட்டத்தை வறட்சிப் பகுதியாக அறிவிக்க காங்கிரஸ் கோரிக்கை

சங்கரன்கோவில் வட்டத்தில் முதற்கட்டமாக பெய்த மழையை நம்பி பல ஆயிரம் ஏக்கர் பரப்பில் விவசாயிகள் நெல் பயிரிட்டனர். ஆனால் மழை தொடர்ந்து பெய்யாத நிலையில் நெல் பயிர்கள் கருகி

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:08 AM
பகிர்:

சங்கரன்கோவில் வட்டத்தை வறட்சிப் பகுதியாக அறிவித்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக திருநெல்வேலி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ். ஆர்.அய்யாத்துரை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சங்கரன்கோவில் வட்டத்தில் முதற்கட்டமாக பெய்த மழையை நம்பி பல ஆயிரம் ஏக்கர் பரப்பில் விவசாயிகள் நெல் பயிரிட்டனர். ஆனால் மழை தொடர்ந்து பெய்யாத நிலையில் நெல் பயிர்கள் கருகி வருகின்றன. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சோளம், பாசிப்பயிறு உள்ளிட்ட பயிர்களைச் சாகுபடி செய்தவர்களும் மழையின்றி பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, சங்கரன்கோவில் வட்டத்தை வறட்சிப் பகுதியாக அறிவித்து உரிய நிவாரணம் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

முழு கட்டுரையைப் படிக்க →