முகப்பு
தற்போதைய செய்திகள்

நடராஜர் கோயிலுக்கு ரூ.2.50 லட்சம் செலவில் 28 எவர்சில்வர் தட்டுகள் வழங்கிய பக்தர்

சென்னையைச் சேர்ந்த ஏகப்ப செட்டியார் என்ற பக்தர் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜப் பெருமானுக்கு நிவேத்தியம் வைத்து படைக்க 28 பெரிய எவர்சில்வர் தட்டுகளை திங்கள்கிழமை கோயில்

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:08 AM
பகிர்:

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு ரூ.2.50 லட்டம் மதிப்பிலான 28 பெரிய எவர்சில்வர் தட்டுகளை சென்னையைச் சேர்ந்த பக்தர் ஒருவர் வழங்கியுள்ளார்.

சென்னையைச் சேர்ந்த ஏகப்ப செட்டியார் என்ற பக்தர் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜப் பெருமானுக்கு நிவேத்தியம் வைத்து படைக்க 28 பெரிய எவர்சில்வர் தட்டுகளை திங்கள்கிழமை கோயில் பொதுதீட்சிதர்களிடம் வழங்கினார். இதன் மதிப்பு ரூ.2.50 லட்சமாகும். பூஜை காலங்களில் சித்சபை முன்புள்ள கனகசபையில் இலைகளில் பிரசாதங்களை வைத்து படைத்து வந்தனர். தற்போது இலைகளுக்கு பதிலாக பிரசாதங்களை வைத்து படைக்க எவர்சில்வர் தட்டுகளை சென்னை பக்தர் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.