விருதுநகர் அருகே கட்டபொம்மன் பற்றிய வரலாறு செப்பு பட்டயம்: வாரிசுதாரர் பீமராஜா தொடங்கி வைத்தார்
விருதுநகர் அருகே கட்டபொம்மன் வரலாறு பற்றிய செப்பு பட்டயத்தை பொதுமக்களின் பார்வைக்காக அவரது வாரிசுதாரர் தொடங்கி வைத்தார்.
விருதுநகர் அருகே கட்டபொம்மன் வரலாறு பற்றிய செப்பு பட்டயத்தை பொதுமக்களின் பார்வைக்காக அவரது வாரிசுதாரர் தொடங்கி வைத்தார்.
விருதுநகர் அருகே பாவாலி கிராம மத்திய பகுதியில் ஆங்கிலேயர்களால் 1799-ல் வைக்கப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் பற்றிய வரலாறு கல்தூனில் தாமிர பட்டயத்தில் இடம் பெற்றுள்ளது. இவை பராமரிக்கப்படாமல் இருந்ததால் கல்தூனில் இருந்து செப்பு பட்டயம் பெயர்ந்து விடும் அளவிற்கு இருந்தது.
இதையறிந்த விருதுநகர் ஊராட்சி ஒன்றியத் தலைவர் கி.கலாநிதி, பாவாலி ஊராட்சி தலைவர் நாகராஜன், வள்ளியூர் கூட்டுறவு தொடக்க வேளாண்மை சங்கத்தின் தலைவர் அன்புராஜ் மற்றும் அக்கிராமத்தைச் சேர்ந்த பெரிய முத்தையா ஆகியோர் சேர்ந்து, தங்களது ரூ.25 ஆயிரம் சொந்த நிதியில் கல்தூனை சரிசெய்து சுற்றிலும் பாதுகாப்பு கேட் அமைத்து வருங்கால சந்ததியினரும் கட்டபொம்மனை பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பராமரிப்புச் செய்துள்ளனர்.
Advertisement
இந்த நிலையில் சனிக்கிழமை நடந்த தொடக்க விழா நிகழ்ச்சிக்கு ஒன்றியக் குழு தலைவர் கலாநிதி தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் நாகராஜன் முன்னிலை வகித்தார். இதில், சிறப்பு விருந்தினராக கட்டபொம்மன் வாரிசுதாரர் பீமராஜா பங்கேற்று செப்பு பட்டயத்தை தொடங்கி வைத்தார்.
இதில்,வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் அக்கிராமத்தைச் சேர்ந்த ஆர்வலர்கள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர்.