முகப்பு
தற்போதைய செய்திகள்

சீர்காழி அருகே லாக்கருடன் அடகுக் கடையில் 150 பவுன் நகை கொள்ளை

நாகை மாவட்டம் சீர்காழி அருகே தொடுவாய் என்ற கிராமத்தில் சின்னக்குழந்தை என்பவருக்குச் சொந்தமான நகை அடகுக் கடையில் லாக்கருடன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டன.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:10 AM
பகிர்:

நாகை மாவட்டம் சீர்காழி அருகே தொடுவாய் என்ற கிராமத்தில் சின்னக்குழந்தை என்பவருக்குச் சொந்தமான நகை அடகுக் கடையில் லாக்கருடன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டன.

நேற்று இரவு கடையைமூடி விட்டுச் சென்ற சின்னக் குழந்தை, இன்று காலை கடையைத் திறக்க வந்த போது கடையின் முன்பக்க ஷெட்டர் உடைக்கப்பட்டிருந்ததாம். இதை அடுத்து அவர் போலீஸில் புகார் அளித்தார். போலீஸார் வந்து சோதனையிட்டதில், நகைகள் வைத்திருந்த லாக்கர் களவு போயிருந்தது. பின்னர் சோதனை செய்ததில், லாக்கர் சிறிதுதொலைவு இழுத்துச் செல்லப்பட்டு, அருகில் இருந்த வயலில் உடைக்கப்பட்ட நிலையில் கிடந்தது. அதில் இருந்த, 150 பவுன் நகை, 3 கிலோ வெள்ளி, ரூ.2.32 லட்சம் ரொக்கம் கொள்ளை போயிருப்பதாக சின்னக் குழந்தை தெரிவித்தார்.

நாகை எஸ்பி சிபிச் சக்ரவர்த்தி மேற்பார்வையிட்டார். சீர்காழி போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →