முகப்பு
தற்போதைய செய்திகள்

நடராஜர் கோயில் தேர்களை சரிசெய்வது குறித்து கலந்தாய்வுக் கூட்டம்!

உதவிஆட்சியர் எம்.அரவிந்த் தலைமை வகித்தார். நடராஜர் கோயில் பொதுதீட்சிதர் காசிராஜ தீட்சிதர், நகரமன்ற உறுப்பினர் நடனசபாதி தீட்சிதர், தேர்களை பராமரித்து வரும் பச்சையப்பன் அறக்கட்டளை

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:10 AM
பகிர்:

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் தேர்களை சரி செய்வது குறித்து உதவிஆட்சியர் அலுவலகத்தில் கலந்தாய்வுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

உதவிஆட்சியர் எம்.அரவிந்த் தலைமை வகித்தார். நடராஜர் கோயில் பொதுதீட்சிதர் காசிராஜ தீட்சிதர், நகரமன்ற உறுப்பினர் நடனசபாதி தீட்சிதர், தேர்களை பராமரித்து வரும் பச்சையப்பன் அறக்கட்டளை மேற்பார்வையாளர்கள் எல்.ராமலிங்கம் பிள்ளை, கே.சரவணன், பொதுப்பணித்துறை (கட்டடம்) உதவி செயற்பொறியாளர் வைத்தியநாதன், போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார், மாவட்ட அரசு வழக்குரைஞர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் சிவகாமி அம்மன் கேருக்கு மரங்கள் இருந்தும் வேலை எதுவும் நடக்கவில்லை என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. தீட்சிதர்கள் தரப்பில் ஸ்ரீநடராஜர், ஸ்ரீசிவகாமிசுந்தரி அம்பாள் ஆகிய இருதேர்களையும் சீர் செய்யும் வேலை செய்ய தாங்கள் ஸ்தபதிகளை ஏற்பாடு செய்ய தயார் என்றும், வேலையை 5 மாதங்களுக்குள் முடித்து தருவுதாகவும். ஆனால் அதற்கு வேண்டிய பொருள்கள் மற்றும் நிதிஉதவியை தடையின்றி பச்சையப்பன் அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்து தருமாறு கேட்டுக் கொண்டனர். பச்சையப்பன் அறக்கட்டளை சார்பில் மேற்கண்ட முடிவதை தங்களது பச்சையப்பா போர்டுக்கு அனுப்பி 2 வாரத்திற்குள் (ஜன.20-ம் தேதிக்குள்) முடிவை தெரிவிப்பதாக கூறினர்.

பச்சையப்பன் அறக்கட்டளை முடிவை தெரிந்து கொண்டு மேல்நடவடிக்கை எடுப்பது கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.