முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் அருகே 4 மாத கர்ப்பமாக இருந்த காதலி தற்கொலை

ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள ஸ்ரீபுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பரிசுத்தநாதன் மகள் ரத்னா (19). இவர் சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரியில் பிபிஏ இரண்டாம் ஆண்டு பயிலுகிறார்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:10 AM
பகிர்:

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே காதலன் திருமண செய்ய மறுத்ததால் 4 மாத கர்ப்பமாக இருந்த காதலி தற்கொலை செய்து கொண்டார்.

ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள ஸ்ரீபுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பரிசுத்தநாதன் மகள் ரத்னா (19). இவர் சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரியில் பிபிஏ இரண்டாம் ஆண்டு பயிலுகிறார். இவரும், இனமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்ற வாலிபரும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

 இருவரும் நெருங்கிப் பழகியதால் ரத்னா 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் கர்ப்பமாக உள்ளதால் திருமணம் செய்து கொள்ளுமாறு சுரேஷை வலியுறுத்தியுள்ளார். அவர் திருமணம் செய்ய மறுத்ததால் ரத்னா வியாழக்கிழமை வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.