முகப்பு
தற்போதைய செய்திகள்

மணிமுத்தாறு அருகே காட்டுயானைகள் நடமாட்டம்

திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு அருகே காட்டு யானைகள் வியாழக்கிழமை கூட்டம் கூட்டமாக நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினர்

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:10 AM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு அருகே காட்டு யானைகள் வியாழக்கிழமை கூட்டம் கூட்டமாக நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் திருக்குறுங்குடியில் இருந்து கடையம் வரை 895 சதுர கி.மீ பரப்பளவில் களக்காடு முண்டன்துறை புலிகள் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் கேரளா வனப்பகுதியில் இடம்பெயரும் காட்டு யானைகள் புலிகள் காப்பகத்திற்கு வருகின்றன.

அவ்வாறு காட்டு யானைகள் மாஞ்சோலை, களக்காடு அருகே மலையடிவாரங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருவதுண்டு. மலையடிவாரத்தில் புகுந்து யானைகள் தென்னை, பனை போன்ற விளைப் பொருட்களை அழித்து சேதப்படுத்தி வருகின்றன. சபரிமலை கோயிலுக்கு பக்தர்கள் அதிகளவில் செல்வதாலும், காட்டுயானைகள் வலசப் பருவத்தி்ல் இருப்பதாலும் வேறு பகுதிக்கு இடம்பெயர்வதாக கூறப்படுகிறது.

கடந்த சில தினங்களாக மணிமுத்தாறு அருவி பகுதியில் காட்டு யானை ஒன்று குட்டியுடன் நடமாட்டம் இருந்ததாக அருவிக்கு குளிக்க சென்றவர்கள் தெரிவித்தனர். இதனிடையே வியாழக்கிழமை மணிமுத்தாறு அருகே வண்டல்ஓடை பகுதியில் 10 காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக நடமாடியதாகவும், யானைகளை காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →