முகப்பு
தற்போதைய செய்திகள்

தொழிலாளர்களுக்கான திட்டங்களை பெற்றுத்தர அதிகாரிகள் உதவ வேண்டும்:சட்டப்பேரவை உறுப்பினர் க.பாண்டியராஜன்

கட்டுமானம், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான நலவாரிய திட்டங்களை அதிகாரிகள் தொழிலாளர்கள் பெற்றுத் தருவதற்கு உதவி செய்ய வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினர் க.

பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 9:41 AM

கட்டுமானம், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான நலவாரிய திட்டங்களை அதிகாரிகள் தொழிலாளர்கள் பெற்றுத் தருவதற்கு உதவி செய்ய வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினர் க.பாண்டியராஜன் கேட்டுக் கொண்டார்.

     விருதுநகர் தனியார் அரங்கத்தில் வெள்ளிக்கிழமை நடந்த முகாமை சட்டப்பேரவை உறுப்பினர் க.பாண்டியராஜன் தொடங்கி வைத்து பேசியதாவது: அமைப்பு சாரா தொழிலாளர்கள் பயனடைய வேண்டும் என்பதற்காக தமிழக முதல்வர் நலவாரியங்களை தொடங்கி செயல்படுத்தி வருகிறார். தமிழகத்தில் 60 வகையான தொழில்களில் ஈடுபடும் உடலுழைப்பு தொழிலாளர்களும், 38 வகையான கட்டுமான தொழிலாளர்களையும் கண்டறிந்து, அவர்களின் குடும்பத்தினருக்கு சமூக பாதுகாப்பு அளிக்கும் வகையில் தொழிலாளர் நலவாரியங்களை அமைத்துள்ளார். அரசின் நலத்திட்டங்களை தொழிலாளர்கள் பெறுவதற்கான விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளார்.

    மேலும், நலவாரிய உறுப்பினர்களுக்காக அறிவித்துள்ள விபத்து ஊனம், விபத்து மரணம், ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இத்திட்டங்களை தொழிலாளர்களுக்கு பெற்று தருவதற்கு அலுவலர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் சட்டப்பேரவை உறுப்பினர் க.பாண்டியராஜன் கேட்டுக் கொண்டார்.

Advertisement

     இம்முகாமில் கைவண்டி, மாட்டுவண்டி, லாரி சுமை ஏற்றுமதி, இறக்குமதி தொழிலாளர்கள், ஊர்தி ஓட்டுநர்கள் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆர்வத்துடன் எம்.எல்.ஏவிடம் அளித்தனர். இதில், நகராட்சி தலைவர் மா.சாந்தி, ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் கி.கலாநிதி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கே.கே.பாண்டியன், நகர செயலாளர் முகமது நயினார், தொழிலாளர் நலத்துறை மண்டல துணை ஆணையாளர் பொன்னுச்சாமி, தொழிலாளர் நலத்துறை அலுவலர் லீலாதேவி உள்ளி்ட்டோர் கலந்து கொண்டனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.