பிப்.1 முதல் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் அருப்புக்கோட்டை-விருதுநகர் வழியாக செங்கோட்டை வரை இயக்கப்படும் :மாணிக்கம் தாகூர்
பிப்.1ம் தேதி முதல் அருப்புக்கோட்டை-விருதுநகர் வழியாக செங்கோட்டை வரையில் சிலம்பு எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் இயக்கப்பட இருப்பதாக மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர்
பிப்.1ம் தேதி முதல் அருப்புக்கோட்டை-விருதுநகர் வழியாக செங்கோட்டை வரையில் சிலம்பு எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் இயக்கப்பட இருப்பதாக மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியி்ட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம் வருமாறு: விருதுநகர்-மானாமதுரை அகலரயில்பாதை திட்டம் கடந்தாண்டு ஜூலை 14-ம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அதையடுத்து காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15-ம் தேதி இப்பாதையில் புதுச்சேரியில் இருந்து மானாமதுரை-விருதுநகர் வழியாக கன்னியாகுமரி வரையிலான ரயில் போக்குவரத்து தொடங்கியது.
இதைத் தொடர்ந்து காரைக்குடி-விருதுநகர் மற்றும் ராமேஸ்வரத்திலிருந்து மானாமதுரை-விருதுநகர் வழியாக தினசரி ரயில்கள், சென்னை சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை அருப்புக்கோட்டை, விருதுநகர் வழியாக செங்கோட்டை வரையில் நீட்டிக்க மல்லிகார்ஜூனே கார்கே மற்றும் ரயில்வே நிலைக்குழுத் தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோரை சந்தித்து வலியுறுத்தினேன்.
Advertisement
இந்நிலையில் விருதுநகர்-காரைக்குடி இடையே அருப்புக்கோட்டை, திருச்சுழி, நரிக்குடி, மானாமதுரை வழியாக கடந்த செப்-9ம் தேதி முதல் பயணிகள் ரயில் இயங்கி வருகிறது. இதையடுத்து, பிப்.1-ம் தேதி முதல் சிலம்பு எக்ஸ்பிரஸ்
அருப்புக்கோட்டை-விருதுநகர் வழியாக செங்கோட்டை வரையில் இயக்கப்பட இருக்கிறது.
சென்னையில் இருந்து சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் மானாமதுரைக்கு காலை 7.45 வந்து சேர்கிறது. இங்கிருந்து காலை 9.15 மணிக்கு புறப்பட்டு அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம் வழியாக செங்கோட்டைக்கு 1.15 மணிக்கு சென்றடையும். அதையடுத்து, செங்கோட்டையிலிருந்து பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு மானாமதுரைக்கு வந்தடையும். பின் இங்கிருந்து இரவு 9 மணிக்கு சென்னைக்கு புறப்பட்டுச் செல்லும். இதன் மூலம் இப்பகுதி வணிகர்கள் மற்றும் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய ரயில்வே துறை அமைச்சர் மல்லிகார்ஜூனே கார்கேவுக்கு தொகுதி மக்களின் சார்பாக நன்றியை விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.