விருதுநகர் மாவட்ட பகுதியில் தைப்பொங்கலுக்கான செங்கரும்பு அறுவடை மும்முரம்
விருதுநகர் மாவட்ட பகுதி கிராமங்களில் தைப்பொங்கல் திருவிழாவிற்கு பயன்படுத்தப்படும் செங்கரும்பு அறுவடை மும்முரமாக நடந்து வருகிறது.
விருதுநகர் மாவட்ட பகுதி கிராமங்களில் தைப்பொங்கல் திருவிழாவிற்கு பயன்படுத்தப்படும் செங்கரும்பு அறுவடை மும்முரமாக நடந்து வருகிறது.
விருதுநகர், மதுரை மாவட்ட எல்லைப்பகுதி கிராமங்களான நடையனேரி, முருகனேரி, தாழிகுளத்துப்பட்டி, தாதங்குளம், எரிச்சநத்தம், கோபிநாயக்கன்பட்டி, செங்குளம், செங்கமலநாச்சியார்புரம், செவலூர், அருப்புக்கோட்டை, திருச்சுழி உள்ளிட்ட பகுதியில் சாகுபடி செய்யப்படுகிறது. இப்பகுதியில் விளைவிக்கப்படும் செங்கரும்பு தித்திப்பு சுவையுடையதாக இருக்கிறது. தற்போது, இப்பகுதியில் அறுவடை மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதை வாங்கிச் செல்வதற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்துள்ளனர்.
நிகழாண்டில் போதுமான மழை இல்லாத காரணத்தால், கண்மாய்களிலும், கிணறுகளிலும் நீர் வரத்தில்லை. இதுபோன்ற காரணங்களால் 200 ஹெக்டேர் குறைந்த பரப்பளவில் செங்கரும்பு சாகுபடி செய்துள்ளனர். கடந்தாண்டு இப்பகுதிகளில் 10 ஆயிரம் ஹெக்டேர்களில் பயிரிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்தாண்டு ஒரு மராக்கால் அளவில் நன்றாக விளைந்த செங்கரும்பு 25 ஆயிரத்திற்கு விலை போனாது. இதில், 40 ஆயிரம் முதல் 45 ஆயிரம் வரையில் விலைபோகிறது. 80 முதல் 90 கட்டுக்கள் வரையில் கிடைக்கும். கடந்தாண்டு ஒரு கட்டு ரூ.250-க்கு விற்பனை ஆனாது.
Advertisement
தற்போது, ரூ.350 முதல் ரூ.400 ஆக அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். செம்மண் தரையில் விளைவி்ககப்படும் செங்கரும்பு அதிக தித்திப்புச் சுவையுடையதாக இருப்பதால் திருநெல்வேலி, நகர்கோவில், செங்கோட்டை, மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்ட வியாபாரிகள் அதிகம் பேர் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.
இந்நிலையில் சாகுபடி பரப்பளவு குறைந்துள்ளதால், தேவையான அளவு செங்கரும்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏமாற்றுத்துடன் திரும்பிச் செல்லும் நிலையேற்பட்டுள்ளது. இது குறித்து நடையனேரியைச் சேர்ந்த கரும்பு விவசாயி ராஜமாணிக்கம்(60) என்பவர் கூறுகையில், இக்குறிப்பிட்ட பகுதியில் அதிக அளவில் பயிரிட்டிருந்த நிலையில் மழையில்லாததால் கரும்பு வளர்ச்சி பாதித்தது. இதுபோன்ற காரணங்களால் ஒவ்வொரு விவசாயியும் குறைந்த பரப்பளவிலேயே பயிரிட்டிருந்தனர். கடந்த முறை 3 ஏக்கரில் பயிர் செய்த நிலையில், 1 ஏக்கராக குறைந்துள்ளது.
ஒரு ஏக்கரில் பயிர் செய்வதற்கு பராமரிப்பு செலவிற்கு 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரையில் செலவாகும். இந்நிலையில், குறைந்த அளவில் பயிரிட்டுள்ளதாலும், செங்கரும்பின் விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.