ஜன் தர்பார் இனி கிடையாது: அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
ஜன் தர்பார் குறைகேட்பு நிகழ்ச்சியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதையடுத்து இனி நடத்தப்பட மாட்டாது என தில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்
ஜன் தர்பார் குறைகேட்பு நிகழ்ச்சியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதையடுத்து இனி நடத்தப்பட மாட்டாது என தில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமையன்று ஜன் தர்பார் நிகழ்ச்சியின்போது, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடியதால் பயங்கர தள்ளுமுள்ளு ஏற்பட்டதையடுத்து கெஜ்ரிவால் இந்த முடிவை எடுத்துள்ளார். இதுகுறித்து புது தில்லியில் இன்று பேசிய அர்விந்த் கெஜ்ரிவால், கூட்ட நெரிசல் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால், இனி மக்களை சந்தித்து குறைகளை கேட்கும் நிகழ்ச்சி நடைபெறாது. அதற்கு பதிலாக மின்னஞ்சல், கடிதம் மற்றும் தொலைபேசி மூலமாக புகார்களை தெரிவிக்கலாம். மேலும் புகார் மனுக்களை பெற தனியாக உதவி மையங்களும் அமைக்கப்படும் என்றார்.