முகப்பு
தற்போதைய செய்திகள்

நிலக்கரி சுரங்க முறைகேடு: சிபிஐ அறிக்கை தாக்கல்

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதால், மத்திய அரசுக் கருவூலத்துக்கு ரூ.1,86,000 கோடி இழப்பு ஏற்பட்டதாக நாடாளுமன்றத்தில் தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி அறிக்கை

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:03 AM
பகிர்:

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதால், மத்திய அரசுக் கருவூலத்துக்கு ரூ.1,86,000 கோடி இழப்பு ஏற்பட்டதாக நாடாளுமன்றத்தில் தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி அறிக்கை தாக்கல் செய்தார். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த ஊழல் விவகாரம் குறித்து, உச்சநீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.

16 நிறுவனங்கள் மீது வழக்கு: 195 நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகள் குறித்து, சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. இதில் 16 ஒதுக்கீடுகளில் மோசடி, தவறான தகவல்கள் மற்றும் ஊழல் நடந்திருப்பதற்கான முகாந்திரம் இருப்பதை சி.பி.ஐ. கண்டுபிடித்தது.

இதனையடுத்து அந்த ஒதுக்கீடுகளை பெற்ற ஏ.எம்.ஆர். அயர்ன் அண்ட் ஸ்டீல், ஜே.எல்.டி. யாவத்மல் எனர்ஜி, வினி அயர்ன் அண்ட் ஸ்டீல் உத்யோக், விகாஸ் மெடல்ஸ், கிரேஸ் இண்டஸ்ட்ரீஸ், ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர், ஜார்க்கண்ட் இஸ்பத், கிரீன் இன்ப்ராஸ்ட்ரக்சர், ஹிண்டால்கோ, பி.எல்.ஏ. இண்டஸ்ட்ரீஸ், காஸ்ட்ரான் டெக்னாலஜீஸ் அண்ட் காஸ்ட்ரான் மைனிங் உள்ளிட்ட 16 நிறுவனங்கள் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.‘

நிலக்கரி சுரங்க விவகாரத்தில் 1993ம் ஆண்டு முதல் தற்போது வரை நடைபெற்ற ஒதுக்கீடு தொடர்பாக சிபிஐ விரிவாக விசாரணை நடத்தியது. இந்த விசாரணை அறிக்கையை சிபிஐ, உச்ச நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.