முகப்பு
தற்போதைய செய்திகள்

விருதுநகர்: அனுமதியின்றி மதுப்பாட்டில் விற்றதாக 32 பேர் கைது

விருதுநகர் மாவட்ட பகுதியில் அனுமதியின்றி மதுப்பாட்டில்கள் விற்றதாக 32 பேரை போலீஸார் கைது செய்தனர். அதோடு 343 மதுபாட்டில்களை  பறிமுதல்

பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 9:33 AM

விருதுநகர் மாவட்ட பகுதியில் அனுமதியின்றி மதுப்பாட்டில்கள் விற்றதாக 32 பேரை போலீஸார் கைது செய்தனர். அதோடு 343 மதுபாட்டில்களை  பறிமுதல் செய்தனர்.

    விருதுநகர் மாவட்டத்தில் தைப்பொங்கல் திருவிழாவை முன்னிட்டு 14,15 ஆகிய நாள்களில் அரசு மதுபானக் கடைகள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தன. இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு மதுபான பாரை ஏலம் பெற்று நடத்துகிறவர்கள் மற்றும் வெளிநபர்கள் ஆகியோர் மொத்தமாக மதுப்பாட்டில்களை வாங்கி அனுமதியின்றி அதிக விலைக்கு விற்பனை செய்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு ரகசிய தகவல் வந்தது.

   அதையடுத்து, உடனே தீவிர ரோந்து செல்வதற்கு அந்தந்த பகுதி காவல் நிலையங்களைச் சேர்ந்த காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன் உத்தரவிட்டார். குறிப்பிட்ட அரசு விடுமுறை நாள்களில் அதிக விலைக்கு விற்பனை செய்யும் பகுதிகளில் ரோந்து சென்றனர்.

Advertisement

   அதன் அடிப்படையில் விருதுநகர்-சிவகாசி சாலையில் பார் பகுதி ஒரத்தில் மது விற்ற பாஸ்கரன்(23), கன்னிசேரி பகுதியில் வீரமணி(31), வெம்பக்கோட்டையில் பால்ச்சாமி(28), புதுப்பட்டியைச் சேர்ந்த திருப்பதி(33), ராஜபாளையம் சிவகுமார்(31), ஆலங்குளத்தில் ஆறுமுகம்(34) மற்றும் ஆறுமுகம்(23) உள்ளிட்ட 32 பேரை போலிஸார் கைது செய்தனர். அதோடு, விற்பனைக்கு வைத்திருந்த 343 மதுப்பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.