முகப்பு
தற்போதைய செய்திகள்

வேலை நிறுத்தம்: நெல்லையில் ரயில்வே தொழிலாளர்களிடம் ரகசிய வாக்கெடுப்பு

திருநெல்வேலியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துவது தொடர்பாக ரயில்வே தொழிலாளர்களிடம் கருத்தும் கேட்கும் வகையில் ரகசிய வாக்கெடுப்பு வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:04 AM
பகிர்:

திருநெல்வேலியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துவது தொடர்பாக ரயில்வே தொழிலாளர்களிடம் கருத்தும் கேட்கும் வகையில் ரகசிய வாக்கெடுப்பு வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது.

ரயில்வே ஊழியர்களுக்கான 7 வது ஊதியக்குழு உடனடியாக நியமனம் செய்ய வேண்டும். 50 சதவிகித அகவிலைப்படியினை அடிப்படை சம்பளத்துடன் இணைக்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்ட்ததை ரத்து செய்ய வேண்டும். இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். லார்ஜஸ் எனும் ஓய்வுபெறும் திட்டத்தை அனைத்துத்துறையிலும் அமல்படுத்த வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 35 அம்ச கோரி்க்கைகளை வலியுறுத்தி ரயில்வே தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இந்த போராட்டம் குறித்து தொழிலாளர்களின் கருத்தை அறியும் வகையில்  மதுரை கோட்டத்தில் திருநெல்வேலி கிளையில் தெற்கு ரயில்வே தொழிலாளர்கள் சங்கம் (எஸ்.ஆர்.இ.எஸ்) சார்பில் திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை ரயில்வே தொழிலாளர்களிடம் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.அமைப்பின் திருநெல்வேலி மேற்கு கிளைச் செயலர் ஆறுமுகம், கிழக்கு கிளைச் செயலர் சுந்தரகணபதி, உதவி கோட்டச் செயலர் ராமசாமி, நிர்வாகிகள் ராமசாமி, காளிமுத்து, இமானுவேல், ஐசக்அருள்தாஸ் உள்ளிட்டோர் தொழிலாளர்களை  சந்தித்து வாக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். 

முழு கட்டுரையைப் படிக்க →