காரைக்காலில் வீட்டினர் உறங்கியபோது வீடு புகுந்து 55 பவுன் நகை கொள்ளை
காரைக்கால் நேரு நகர் இரண்டாவது குறுக்குத் தெருவில் வசிப்பவர் கமால் பாஷா. இவர், காரைக்காலில் டைல்ஸ் கடை வைத்து விற்பனை செய்து வருகிறார். இவரது மனைவி சுலேகா, மாமியார் லத்திபா மூவரும் அவருடைய
காரைக்கால் நேரு நகர் இரண்டாவது குறுக்குத் தெருவில் வசிப்பவர் கமால் பாஷா. இவர், காரைக்காலில் டைல்ஸ் கடை வைத்து விற்பனை செய்து வருகிறார். இவரது மனைவி சுலேகா, மாமியார் லத்திபா மூவரும் அவருடைய வீட்டில் நேற்று இரவு உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது மர்ம நபர்கள் வீட்டில் புகுந்து மாமியார் படுத்திருந்த அறைக்குள் நுழைந்து, 3 பீரோக்களில் ஒன்றின் பூட்டைத் திறந்து, 55 பவுன் நகைகளைத் திருடிவிட்டு, பூட்டின் சாவியைத் தூக்கியெறிந்து விட்டுச் சென்றுவிட்டனர்.
காலை கண்விழித்து எழுந்த மாமியார் லத்திபா, கமால் பாஷாவிடம் கூற, அவர் காரைக்கால் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காரைக்கால் போலீஸார் சம்பவ இடத்துக்கு மோப்ப நாய்களுடன் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.