காங்கிரஸ் ஆட்சியின் ஊழல் பணத்தை நாட்டு நலனிற்காக கையகப்படுத்த வேண்டும்: வேணுகோபால் எம்.பி பேச்சு
கடந்த 9 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்ற பல்வேறு ஊழல்களில் பதுக்கப்பட்ட பல லட்சம் கோடி ஊழல் பணத்தை நாட்டின் நலனிற்காக கையக்கப்படுத்த வேண்டும் என கும்மிடிப்பூண்டி அடுத்த
தற்போதைய செய்திகள்காங்கிரஸ் ஆட்சியின் ஊழல் பணத்தை நாட்டு நலனிற்காக கையகப்படுத்த வேண்டும்: வேணுகோபால் எம்.பி பேச்சு
கடந்த 9 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்ற பல்வேறு ஊழல்களில் பதுக்கப்பட்ட பல லட்சம் கோடி ஊழல் பணத்தை நாட்டின் நலனிற்காக கையக்கப்படுத்த வேண்டும் என கும்மிடிப்பூண்டி அடுத்த
கடந்த 9 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்ற பல்வேறு ஊழல்களில் பதுக்கப்பட்ட பல லட்சம் கோடி ஊழல் பணத்தை நாட்டின் நலனிற்காக கையக்கப்படுத்த வேண்டும் என கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேட்டில் சனிக்கிழமை நடைபெற்ற எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா கூட்டத்தில் திருவள்ளூர் எம்.பி வேணுகோபால் தெரிவித்தார்.
கும்மிடிப்பூண்டி ஒன்றிய அ.தி.மு.க சார்பில் பாதிரிவேட்டில் நடைபெற்ற எம்.ஜி.ஆரின் 97வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்திற்கு ஒன்றிய செயலாலர் கோபால்நாயுடு தலைமை தாங்கினார்.கூட்டத்திற்கு மாவட்ட கவுன்சிலர் கோவி.நாராயணமூர்த்தி, தொகுதி செயலாளர் தியாகராயம்,முன்னாள் அவை தலைவர் சந்திரன், மாவட்ட இளைஞரணி துணை தலைவர் ரமேஷ்குமார், மாவட்ட பிரதிநிதிகள் ஷியாமளா தன்ராஜ், டேவிட்குமார், மாவட்ட மாணவரணி செயலாளர் முல்லைவேந்தன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் அபிராமன், பூந்தமல்லி எம்.எல்.ஏ இரா.மணிமாறன், தலைமை கழக பேச்சாளர் என்.எஸ்.கோவிந்தராஜூலு சிறப்புரையாற்றினார்கள்.
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டட திருவள்ளூர் தொகுதி எம்.பி வேணுகோபால் பேசுகையில், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் விலைவாசி உயர்வும், ரூபாய் மதிப்பு குறைந்து காணப்படுவதாகவும், காங்கிரஸ் ஆட்சியில் 2-ஜி ஊழல் பணமான 1.76 லட்சம் கோடி, நிலக்கரி ஒதுக்கீட்டில் முறைகேட்டு ஊழல் பணமான 1.86 லட்சம் கோடி போன்ற பல ஊழல்களில் பதுக்கப்பட்ட பல லட்சம் கோடி பணத்தை பறிமுதல் செய்து அதனை நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்தி விலைவாசி உயர்வை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மேலும் தமிழக வளர்ச்சிக்காக பல முறை அதிமுக எம்.பி-க்கள் 9 பேர் மட்டுமே குரல் கொடுத்து வரும் வேளையில் தி.மு.க எம்.பிக்கள் மௌனம் சாதிப்பதாகவும், கடந்த நான்கரை ஆண்டு காலம் காங்கிரஸோடு கூட்டணி வைத்து பதவி லாபம் அனுபவித்து,காங்கிரஸோடு இனியும் இருந்தால் தமிழகத்தில் காணாமல் போய்விடுவோம் என்ற பயத்தில் தான் தி.மு.க காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியே வந்தது என்று பேசினார்
கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் பெருவாயல் சுதாகர், ஈகுவார்பாளையம் கே.எம்.எஸ்.சிவகுமார், ஒன்றிய கவுன்சிலர்கள் தயாளன், கோபி, சுரேஷ்ராஜ்,முருகன் உள்ளிட்ட அ.தி.மு.க-வினர் கலந்துக் கொண்டனர்.முடிவில் பாதிரிவேடு ஊராட்சி செயலர் சேகர் நன்றி கூறினார்.