முகப்பு
தற்போதைய செய்திகள்

சுனந்தா சாவிற்கு நான் காரணமல்ல: பாக். பெண் நிருபர் விளக்கம்

மத்திய அமைச்சர் சசி தரூர் மனைவி சுனந்தாவின் மரணத்திற்கு தான் காரணமல்ல என்று பாகிஸ்தான் பெண் நிருபர் மெகர்தர் தெரிவித்துள்ளார். சசதி தரூடன்  அவருக்கு ரகசிய தொடர்பு

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:06 AM
பகிர்:

மத்திய அமைச்சர் சசி தரூர் மனைவி சுனந்தாவின் மரணத்திற்கு தான் காரணமல்ல என்று பாகிஸ்தான் பெண் நிருபர் மெகர்தர் தெரிவித்துள்ளார். சசதி தரூடன்  அவருக்கு ரகசிய தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாயின. இந்நிலையில் நேற்று முன்தினம் சசிதரூர் மனைவி சுனந்தா ஓட்டலில் இறந்துகிடந்தார். இது குறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

 இதுகுறித்து பேசிய பாக். பெண் நிருபர் மெகர்தர், சுனந்தா சாவுக்கு நான் காரணமல்ல, அவரது மரணம் எனக்கு பெரும் கவலையை தந்துள்ளது. சசி தரூரை 2 முறை மட்டுமே சந்துத்துள்ளேன். மற்றபடி அவருக்கு எனக்கு எந்த விதமான தொடர்பும் கிடையாது. ஆனால் சிலர் என் மீது களங்கம் கற்பிக்கின்றனர். இது தவறான செயல். சுனந்தா மரணத்திற்கும் எனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. அவருடைய மரணத்திற்கு நான் பொறுப்பல்ல இவ்வாறு கூறியுள்ளார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.