முகப்பு
தற்போதைய செய்திகள்

தூத்துக்குடியில் உப்பளத் தொழிலாளி கொலை

தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் உள்ள சத்யாநகரைச் சேர்ந்த அந்தோனி மகன் சௌந்திரராஜன் (78). உப்பளத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.இந்நிலையில், வீட்டில்

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:06 AM
பகிர்:

தூத்துக்குடியில் உப்பளத் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை இரவு நண்பர்களால் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மூவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் உள்ள சத்யாநகரைச் சேர்ந்த அந்தோனி மகன் சௌந்திரராஜன் (78). உப்பளத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.இந்நிலையில், வீட்டில் அருகேயுள்ள உப்பளத்தில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையிலும், வயிற்றுப் பகுதியில் கத்தியால் குத்தப்பட்ட நிலையிலும் செüந்திரராஜன் கொலை செய்யப்பட்ட நிலையில் திங்கள்கிழமை அதகாலை சடமாகக் கிடப்பது தெரிய வந்தது.

தகவல் கிடைந்ததும் தென்பாகம் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் செüந்திரராஜனை அதே பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் மூவர் கொலை செய்திருப்பது தெரிய வந்தது.

கொலையுண்ட சௌந்திரராஜனும், அதே பகுதியைச் சேர்ந்த கணவனை பிரிந்து வாழும் பெண்ணுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டதாகவும், இதனால், அந்தப் பெண்ணின் உறவிர்கள் மூவர் செüந்திரராஜனை உப்பளம் பகுதிக்கு அழைத்துச் சென்று கொலை செய்திருப்பதாகவும் விசாரணையில் தெரிய வந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.