முகப்பு
தற்போதைய செய்திகள்

பர்கூர் அருகே சாலை விபத்து: இருவர் பலி

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே திங்கள்கிழமை ஏற்பட்ட சாலை விபத்தில் திருப்பூரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர்கள் 2 பேர் உயிரிழந்தனர். மற்றொருவர் மேல்சிகிச்சைக்காக சேலம் கொண்டு

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:06 AM
பகிர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே திங்கள்கிழமை ஏற்பட்ட சாலை விபத்தில் திருப்பூரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர்கள் 2 பேர் உயிரிழந்தனர். மற்றொருவர் மேல்சிகிச்சைக்காக சேலம் கொண்டு செல்லப்பட்டார்.

திருப்பூரைச் சேர்ந்த சோமசுந்தரம் (45), குமார் (35), செல்வகுமார் (35) ஆகிய மூவரும், திருப்பதி கோயிலுக்கு சென்று காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் வேகமாக சென்றுக் கொண்டிருந்த போது, காரின் சக்கரம் பழதானதாகக் கூறப்படுகிறது.

இதில் நிலைதடுமாறிய கார், சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த தடுப்பில் மோதியதில் காரில் பயணம் செய்த மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

இதில் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சோமசுந்தரம், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். பலத்த காயம் அடைந்த செல்வகுமார், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக சேலம் கொண்டு செல்லப்பட்டார்.

இந்த விபத்து குறித்து கந்திகுப்பம் போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →