போராடுவதை விட்டுவிட்டு நிர்வாகத்தில் கவனம் செலுத்துங்கள்: கெஜ்ரிவாலுக்கு காங்.அறிவுரை
உத்தரவிற்கு கட்டுப்பட மறுத்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தில்லிமுதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மத்திய உள்துறை அமைச்சகம் முன்பு போராட்டம் நடத்த
உத்தரவிற்கு கட்டுப்பட மறுத்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தில்லிமுதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மத்திய உள்துறை அமைச்சகம் முன்பு போராட்டம் நடத்த சென்றபோது ரயில் பவன் முன்பாக போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
அப்போது தனது அமைச்சர்களுடன் அங்கேயே தர்ணா போராட்டம் நடத்தினர். அப்போது பேசிய கே ஜ்ரிவால் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு தில்லி போலீஸாரே பொறுப்பு என்று கூறினார். இந்நிலையில் கெஜ்ரிவாலின் தர்ணா போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் சஞ்சய் நிருபம் கூறுகையில், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தனது டிராமாவை நிறுத்திவிட்டு, நல்லாட்சி நடத்த நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
மேலும் காங்கிரஸ் ஆதரவு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், தில்லி மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டனர். இந்நிலையில் மக்களுக்கு அரசு அமைய வேண்டும் என்பதற்காக ஆம் ஆத்மி ஆதரவளித்துள்ளோம். ஆம் ஆத்மி முழுபொறுப்புனர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு நிர்வாகத்தை பற்றி சரியான புரிதல் இல்லை என்றார்.