முகப்பு
தற்போதைய செய்திகள்

கேஜ்ரிவாலின் போராட்டம்: குடியரசுதின விழா நடத்துவதில் அரசுக்கு சிக்கல்

 தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்,  தனது அமைச்சர்களுடன் இந்தியா கேட் மற்றும் ராஜபாத் அருகே உள்ள ரயில் பவன் முன்பாக தர்ணா போராட்டம் நடத்திவருகிறார். நேற்று போராட்டத்தை

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:11 AM
பகிர்:

 தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்,  தனது அமைச்சர்களுடன் இந்தியா கேட் மற்றும் ராஜபாத் அருகே உள்ள ரயில் பவன் முன்பாக தர்ணா போராட்டம் நடத்திவருகிறார். நேற்று போராட்டத்தை தொடங்கிய கேஜ்ரிவால்  10 நாட்கள் தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளதால், குடியரசு தினவிழா நடத்துவதில் மத்திய அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஏனெனில் ஆண்டு தோறும் இந்தியாகேட் மற்றும் ராஜ்பாத்தில்தான் சுதந்திர தின மற்றும் குடியரசு தின கொண்டாட்டங்கள் நடைபெறும். தற்போது இங்கு போராட்டம் நடைபெறுவதால் குடியரசுதின கொண்டாட்டம் நடத்துவதற்கு சிக்கல் எழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சாதாரணமாக ரயில் பவன் மற்றும் இந்தியகேட் முன்பாக யாராவது போராட்டம் நடத்தினால் உடனடியாக அப்புறுப்படுத்தப்படுவார்கள்.

இந்நிலையில் ஜனநாயக மரபுபடி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதல்வரை எவ்வாறு போராட்ட களத்தில் இருந்து அகற்றுவது என்பது தெரியாமல் போலீஸார் தயக்கத்தில் உள்ளனர். ராணுவ வட்டாரத்தில் போராட்டம் குறித்து விசாரித்ததில் இது குறித்த கேள்விக்கே இடம் இல்லை என்றும், அப்பகுதி போலீஸாரின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி என்றும் எனவே அதற்கு போலீஸாரே பொறுப்பு என்றும் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே வரும் வெள்ளிகிழமை முதல் 29 ஆம் தேதி வரை, அதாவது குடியரசு தின விழா துவங்கும் 72 மணி நேரத்திற்கு முன்பாக அப்பகுதி முழுவதும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்துவிடும். அப்போது எந்தவிதமான நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி தரப்படாது  கடும் கட்டுப்பாடு விதிக்கப்படும். எனவே வரும் 24ஆம் தேதிக்குள்ளாக போராட்டம் முடிக்கப்பட வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டுளள்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 இதனிடையே கேஜ்ரிவாலின் போராட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்ல் தாக்கல் செய்யப்பட்டுளள மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது. போராட்டத்திற்கு உச்ச நீதிமன்றம்  தடைவிதிக்கும் என்று மத்திய அரசு நம்புகிறது. மேலும் போராட்ம் தொடரும் பட்சத்தில்  ரயில் பவனில் இருந்து கேஜ்ரிவாலை வலுகட்டாயமாக வேறு இடத்திற்கு கொண்டு செல்ல முடிவுசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.