தற்போதைய செய்திகள்

விருதுநகர் அருகே ரயில் மோதி கூலித் தொழிலாளி சாவு

விருதுநகர் அருகே அல்லம்பட்டி எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் மாரிச்செல்வம்(22). இப்பகுதியில் பருப்பு ஆலையில் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் செவ்வாய்கிழமை

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே இரவில் அடையாளம் தெரியாத ரயில் மோதியதில் கூலித் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

விருதுநகர் அருகே அல்லம்பட்டி எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் மாரிச்செல்வம்(22). இப்பகுதியில் பருப்பு ஆலையில் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் செவ்வாய்கிழமை இரவு அல்லம்பட்டி பகுதியில் உள்ள ரயில் கேட் அருகே குறுக்கு பாதையில் கடந்து சென்றுள்ளார். அப்போது, எதிர்பாரத விதமாக அடையாளம் தெரியாத ரயில் மோதியதில் உடல் துண்டாகி உயிரிழந்த நிலையில்  தண்டவாளம் ஓரம் கிடந்துள்ளார். அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் புதன்கிழமை காலையில் பார்த்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அதன் அடிப்படையில் ரயில்வே போலீஸார் விரைந்து வந்து சடலத்தை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்குச் கொண்டு சென்றனர். இது குறித்து ரயில்வே நிலைய போலீஸார் வழக்கு பதிவு விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.6.30 லட்சத்தில் திட்டப் பணிகள் தொடக்கம்

ஸ்ரீ எட்டியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

மொபட்டில் சென்ற பெண்ணிடம் வழிப்பறி

பள்ளியில் ஆண்டு விழா

நரியம்பட்டில் எருது விடும் திருவிழா

SCROLL FOR NEXT