விருதுநகர் மாவட்டத்தில் 25-ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்
விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மகளிர் திட்டமும் இணைந்து நடத்தும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வருகிற 25-ம் தேதி சுப்பையா நாடார் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற இருக்கிறது.
விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மகளிர் திட்டமும் இணைந்து நடத்தும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வருகிற 25-ம் தேதி சுப்பையா நாடார் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற இருக்கிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்: இம்மாவட்டத்தில் வேலைவாய்ப்பு இல்லாதவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. குறிப்பிட்ட நாளில் நடத்தப்படுகிற இம்முகாமில் 30-க்கும் மேற்பட்ட பிரசித்திப் பெற்ற தனியார் நிறுவனங்கள் பங்கேற்கிறது. அதோடு, அலுவலகங்களுக்கு தேவையான பணியாளர்களையும் தேர்வு செய்யவுள்ளனர். இதற்கான கல்வி தகுதியாக 8-ம் வகுப்பு தேர்ச்சி, 10,12-வது தேர்ச்சி, பட்டம், தொழிற்பயிற்சி மற்றும் பட்டயம் ஆகியவைகளில் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் கலந்து கொள்ளலாம்.
இக்குறிப்பிட்ட கல்வித்தகுதியுடைய இருபாலரும் குறிப்பிட்ட நாளில் நடைபெற இருக்கிற முகாமில் கலந்து கொள்ளலாம். இதற்கு முன்பு நடந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 650 பேர் தேர்வு பெற்று பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், வேலைவாய்ப்பில்லாத இளைஞர்கள் அனைவரும் வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு தங்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
Advertisement