சிதம்பரத்தில் தச தீர்த்தங்களில் ஜன.30ல் தீர்த்தவாரி உற்சவம்! பொதுதீட்சிதர்கள் ஏற்பாடு
முறையே 1. சிவகங்கை(கோயிலினுள்), 2. கிள்ளை (கடற்கரை), 3.புலிமடு (சக்தி நகர் அம்மாபேட்டை , 4.வியாக்ர தீர்த்தம் (இளமையாக்கினார்), 5. அனந்த தீர்த்தம் (அனந்தீஸ்வரன் கோயில்), 6.நாகச்சேரி
சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தை அமாவாசை தச தீர்த்தங்களில் தீர்த்தவாரி உற்சவம் (30-01-2014) வியாழக்கிழமை அன்று விமரிசையாக நடத்த பொது தீட்சிதர்கள் முடிவு செய்துள்ளனர்.
முறையே 1. சிவகங்கை(கோயிலினுள்), 2. கிள்ளை (கடற்கரை), 3.புலிமடு (சக்தி நகர் அம்மாபேட்டை , 4.வியாக்ர தீர்த்தம் (இளமையாக்கினார்), 5. அனந்த தீர்த்தம் (அனந்தீஸ்வரன் கோயில்), 6.நாகச்சேரி தீர்த்தம், 7.பிரம்ம தீர்த்தம் (சிங்காரத்தோப்பு), 8.சிவப்ரியை தீர்த்தம் (தில்லையம்மன் கோயில்), 9. திருப்பாற்கடல் தீர்த்தம் (பர்ணசாலை), 10 பரமானந்த கூடம் (சித்சபை அருகே உள்ள ஸ்ரீ நடராஜர் அபிஷேக தீர்த்த கிணறு) ஆகிய தச தீர்த்தங்களில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதர்கள் செய்துள்ளனர். பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று ஸ்ரீ நடராஜப்பெருமான் அருளைப் பெற வேண்டும் என உ.வெங்கடேச தீட்சிதர் தெரிவித்துள்ளார்.