பிர்ஹம் பலாத்கார வழக்கு: 13 பேருக்கு 13 நாள் போலீஸ் காவல்
மேற்கு வங்க மாநிலம் பிர்ஹம்மாவட்டத்தில் உள்ள சபல்பூல் கிராமத்தில் வேறு ஜாதி வாலிபரை காதலித்த 20 வயது இளம் பெண்னை, தண்டனை என்ற பெயரில் 12 பேர் பலாத்
மேற்கு வங்க மாநிலம் பிர்ஹம் மாவட்டத்தில் உள்ள சபல்பூல் கிராமத்தில் வேறு ஜாதி வாலிபரை காதலித்த 20 வயது இளம் பெண்னை, தண்டனை என்ற பெயரில் 12 பேர் பலாத்காரம் செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொடூரசம்பவத்தில் தொடர்புடைய கிராமத்தலைவர் உட்பட 13 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்களை இன்று நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர். குற்றவாளிகள் 13 பேரையும் 13 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது