அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பினரின் சிறைநாள் கூட்டம்!
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்- ஊழியர் கூட்டமைப்பு சார்பில் அண்ணாமலைநகர் பூமா கோவில் அருகே போராட்டத்தில் சிறைசென்றை நாளான நினைவு கூறும் சிறை நாள் கூட்டம் மற்றும்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்- ஊழியர் கூட்டமைப்பு சார்பில் அண்ணாமலைநகர் பூமா கோவில் அருகே போராட்டத்தில் சிறைசென்றை நாளான நினைவு கூறும் சிறை நாள் கூட்டம் மற்றும் கூட்டமைப்பு முன்னாள் நிர்வாகி பேராசிரியர் தட்சிணாமூர்த்தி படத்திறப்பு விழா ஆகியவை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பு ஒருங்கினைப்பாளர் பேராசிரியர் ஆர்.உதயசந்திரன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியைச் சேர்ந்த சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் பங்கேற்று அமரர் தட்சிணாமூர்த்தி உருவப் படத்தை திறந்து வைத்து பேசினார். பல்கலைக்கழக ஆசிரியர் சங்க முன்னாள் தலைவர் ஏ.எல். சிதம்பரம் நினைவஞ்சலி உரையாற்றினார். இணை ஒருங்கிணைப்பாளர் சி.மதியழகன் உள்ளிட்ட நிர்வாகிகல் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் அண்ணாமலைப் பல்கலைக்கழக பழைய சட்டமான 1928-ஐ மாற்றி, தற்போது தமிழகஅரசு அண்ணாமலைப் பல்கலைக் கழக சட்டம் 2013 அமுலுக்கு கொண்டு வந்த நாளான செப்.25-ம் தேதியை ஒவ்வொரு ஆண்டும் நினைவு கூறும் வகையில், அந்நாளை 'விலங்கு ஒடித்த நாளாக' கொண்டாடுவது என முடிவு எடுக்கப்பட்டது.