கொக்கு பிடித்த 4 பேர் மீது வழக்கு: தலா ரூ.ஆயிரம் அபராதம்
காட்டுமன்னார்கோயில் அருகே வயல்வெளியில் கொக்குகளை பிடிப்பதாக வனத்துறையினருக்கு தகவல் வந்தது. சிதம்பரம் வனக்காப்பாளர்கள் எம்.ராஜேஷ்குமார், டி.பழனிவேல் மற்றும் களப்பணியாளர்கள்
தாட்டுமன்னார்கோயில் அருகே வயல்வெளியில் கொக்குகளை பிடித்த 4 பேர் மீது வனத்துறையினர் வழக்குப் பதிந்து தலா ரூ.ஆயிரம் அபராதம் வசூலித்தனர்.
காட்டுமன்னார்கோயில் அருகே வயல்வெளியில் கொக்குகளை பிடிப்பதாக வனத்துறையினருக்கு தகவல் வந்தது. சிதம்பரம் வனக்காப்பாளர்கள் எம்.ராஜேஷ்குமார், டி.பழனிவேல் மற்றும் களப்பணியாளர்கள் பறவை வேட்டையை தடுக்கும் நோக்கில் சனிக்கிழமை ரோந்து சென்றனர். அப்போது தெறகிருப்பு கிராமத்தில் இரு கொக்குகளும், அழிஞ்சிமங்கலம் கிராமத்தில் இரு கொக்குகளும் பிடிக்கும் போது 4 பேர் பிடிபட்டனர். இதுகுறித்து வனத்துறையினர் ஆனந்தன் (35), ரஜினி (25), மயில்தோகை (50), ஜப்பான் (24) ஆகிய 4 பேர் மீது வழக்குப் பதிந்து தலா ரூ. ஆயிரம் வீதம் ரூ.4 அபாரதம் வசூலித்தனர்.
பின்னர் உயிரோடு கைப்பற்றிய 4 கொக்குகளையும் வயல்வெளி பகுதியில் கொண்டு பாதுகாப்பாக விட்டனர்.