சிதம்பரத்தில் மொழிப்போர் தியாகி ராஜேந்திரன் சிலைக்கு மாலை அணிவித்த அரசியல் கட்சிகள்!
வீரவணக்கநாளை முன்னிட்டு சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள மொழிப்போர் தியாகி ராஜேந்திரன் சிலைக்கு சனிக்கிழமை அதிமுக, திமுக, பாமக,
வீரவணக்கநாளை முன்னிட்டு சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள மொழிப்போர் தியாகி ராஜேந்திரன் சிலைக்கு சனிக்கிழமை அதிமுக, திமுக, பாமக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மூவேந்தர் முன்னேற்றக்கழகம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதிமுக: கடலூர் மேற்கு மாவட்ட மாணவரணி சார்பில் அதிமுகவினர் சிதம்பரம் காந்திசிலையிலிருந்து ஊர்வலமாக சென்று அண்ணாமலைநகரில் உள்ள ராஜேந்திரன்சிலைக்கு மாலை அணிவித்தனர். கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத் தலைவருமான ஏ.அருண்மொழிதேவன் ராஜேந்திரன் சிலைக்கு மாலை அணிவித்தார். இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் செல்விராமஜெயம், நாகமுருகுமாறன், நகரச் செயலாளர் தோப்பு கே.சுந்தர், முன்னாள் எம்எல்ஏ பி.எஸ்.அருள், மாவட்ட பொருளாளர் எம்.எஸ்.என்.குமார், மாவட்ட இலக்கிய அணி செயலர் சொ.ஜவகர், மாவட்ட துணைச்செயலாளர் தேன்மொழி காத்தவராயசாமி,நகர அவைத் தலைவர் எம்.யேசுராஜ், பொதுக்குழு உறுப்பினர் தில்லை ஏ.கே.சி.சேகர், தொகுதி துணைச் செயலாளர் சி.கே.சுரேஷ்பாபு, நகர துணைச் செயலாளர் டேங்க் ஆர்.சண்முகம், எம்.ஜி.பாரி, நகர பேரவை செயலாளர் பன்னீர்செல்வம், குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திமுக: நகர திமுக சார்பில் காந்திசிலையிலிருந்து ஊர்வலமாக சென்று அண்ணாமலைநகரில் உள்ள ராஜேந்திரன்சிலைக்கு நகரச் செயலாளர் கே.ஆர்.செந்தில்குமார் மாலை அணிவித்தார். இந்நிகழ்ச்சியில் நகர அவைத் தலைவர் தென்னவன் ஆறுமுரகம், துணைச் செயலாளர்கள் பாலசுப்பிரமணியன், பன்னீர்செல்வம், நகர இளைஞரணி அமைப்பாளர் மக்கள் அருள், நகரமன்ற உறுப்பினர்கள் ரா.வெங்கடேசன், அப்புசந்திரசேகரன், ஏ.ஆர்.சி.மணிகண்டன், கு.நடராஜன், முன்னாள் குமராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் ரா.மாமல்லன் நிர்வாகிகள் உத்திராபதி, ஜாபர்அலி, சேகர், அப்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மூவேந்தர் முன்னேற்றக்கழகம்: மூமுக சார்பில் காந்திசிலையிலிருந்து கட்சி நிர்வாகிகளுடன் ஊர்வலமாக சென்று அண்ணாமலைநகரில் உள்ள ராஜேந்திரன் சிலைக்கு மாநிலத் தலைவர் ஜி.எம்.ஸ்ரீதர்வாண்டையார் மாலை அணிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாநில பொதுச்செயலாளர் ஜி.செல்வராஜ், பி.என்.மூர்த்தி, மறவன் நடராஜன், மதிவாணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி: கடலூர் தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்டச் செயலாளர் வ.க.செல்லப்பன் தலைமையில் நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று ராஜேந்திரன் சிலைக்கு மாலை அணிவித்தனர். நிர்வாகிகள் நகரமன்ற உறுப்பினர் பெரு.திருவரசு, ரா.காவியச்செல்வன், நீதிவளவன், பால.அறவாழி, குறிஞ்சிவளவன், தமிழ்வளவன், ரத்தினவேலு, ஆதிமூலம், இன்பவளவன், தாய்மண் சிற்றரசு, இளம்வழுதி, கமல்ராஜ், காமராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பாமக: பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் வேணு.புவனேஸ்வரன் தலைமையில் நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று அண்ணாமலைநகரில் உள்ள ராஜேந்திரன் சிலைக்கு மாலை அணிவித்தனர். இந்நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் முத்து.குமார், மாவட்ட துணைச்செயலாளர் எஸ்.திருநாவுக்கரசு, ஒன்றியச் செயலாளர்கள் ராஜா, கார்த்தி, பரணிதரன், சந்தனக்குமார், விவசாய சங்கத் தலைவர் சஞ்சீவி, மாவட்ட இளைஞரணி செயலாளர் மதன், மாவட்ட தொண்டரணி செயலாளர் சரவணன், கருணா செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழக மாணவர் முன்னணி: மாணவர் முன்னணி நடுவண்குழு உறுப்பினர் ஆ.யவனராணி தலைமை வகித்தார். தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் வே.சுப்பிரமணிய சிவா மொழிப்போர் தியாகி ராஜேந்திரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் தமிழ் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுக்குழு உறுப்பினர் மா.கோ.தேவராசன், இளைஞர் முன்னணி துணைப் பொதுச்செயலாளர் ஆ.குபேரன், தமிழக மாணவர் முன்னணி நகர அமைப்பாளர் தனராஜ், தமிழக உழவர் முன்னணி நிர்வாகி மு.முருகவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.