அரசு பேருந்தில் திடீர் தீ-பயணிகள் அலறி ஓட்டம்
திண்டிவனம் மேம்பாலத்தின் மேல் நின்ற அரசு பேருந்தில் ஏற்ப்பட்ட திடீர் தீயினால் பயணிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை
திண்டிவனம் மேம்பாலத்தின் மேல் நின்ற அரசு பேருந்தில் ஏற்ப்பட்ட திடீர் தீயினால் பயணிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுசசேரியில் இருந்து காஞ்சிபுரத்திற்கு அரசு பேருந்து சென்றது.திண்டிவனம் மேம்பாலத்தின் மேல் பயணிகளை ஏற்ற அப்பேருந்து சனிக்கிழமை நள்ளிரவில் நின்றது.அப்போது பேருந்தின் இன்ஜினில் ஏற்ப்பட்ட கோளாறு காரணமாக திடீரென புகை மண்டலம் ஏற்ப்பட்டு தீ ஏறிய துவங்கியது.பேருந்தில் இருந்த ஓட்டுனர் நடத்துனர் உட்பட பயணிகள் அனைவரும் அவசரமாக பேருந்தில் இருந்து இறங்கி உயிர் தப்பினர்.
சம்பவ இடத்திற்கு வந்த திண்டிவனம் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.இந்த தீ விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.பயணிகள் அனைவரும் மாற்றுப்பேருந்து மூலம் காஞ்சிபுரம் அனுப்பி வைக்கப்பட்டனர்.