கருணாநிதி ஆட்சியில்தான் தொழில்புரட்சி ஏற்பட்டது: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
கருணாநிதி ஆட்சியில் தமிழகத்தில் நிறைய தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு தொழிற்புரட்சி ஏற்பட்டது. தற்போது கடும் மின்வெட்டினால் தமிழகத்தில் தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன என கடலூர்
கருணாநிதி ஆட்சியில் தமிழகத்தில் நிறைய தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு தொழிற்புரட்சி ஏற்பட்டது. தற்போது கடும் மின்வெட்டினால் தமிழகத்தில் தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன என கடலூர் மாவட்ட திமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
சிதம்பரத்தில் நகர திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. நகரச் செயலாளர் கே.ஆர்.செந்தில்குமார் தலைமை வகித்தார். நகர துணைச் செயலாளர் சி.பன்னீர்செல்வம் வரவேற்றார். பொதுக்குழு உறுப்பினர் ஏ.எஸ்.திருநாவுக்கரசு, நகர அவைத் தலைவர் தென்னவன் ஆறுமுகம், நகரமன்ற உறுப்பினர்கள் அப்புசந்திரசேகர், ரா.வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சிறப்புரையாற்றினார். அவர் பேசியது: திமுக தலைவர் கருணாநிதி ஆட்சியில் விலைவாசி குறைந்து காணப்பட்டது. தற்போது முட்டை, எண்ணெய் உள்ளிட்ட அனைத்து பொருள்களும் விலையேறிவிட்டது. தமிழத்தில் விலைவாசியை கட்டுப்படுத்த முடியாத ஜெயலலிதா பிரதமராகப் போகிறாராம். திமுக ஆட்சியில் 2 மணி நேரம்தான் மின்வெட்டு. ஆனால் தற்போது அதிமுக ஆட்சியில் 12 மணி நேரம் மின்வெட்டு செய்யப்படுகிறது. எனவே அதிமுக ஆட்சியை அகற்றி, கருணாநிதியை மீண்டும் ஆட்சியில் அமர்த்திட இந்த வீரவணக்கநாள் கூட்டத்தில் சபதம் ஏற்போம் என எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
கூட்டத்தில் தலைமைக்கழக பேச்சாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான வி.பி.ராஜன் வீரவணக்கநாள் உரையாற்றினார். ஒன்றியச் செயலாளர்கள் ரா.மாமல்லன் (குமராட்சி), வி.என்.ஜெயராமன் (புவனகிரி), முத்துசாமி (காட்டுமன்னார்கோயில்), காட்டுமன்னார்கோயில் முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் கணேசமூர்த்தி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆர்.ராஜேந்திரகுமார், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் ஏ.எஸ்.மதியழகன், நகரமன்ற உறுப்பினர்கள் ஏ.ஆர்.சி.மணிகண்டன், கோ.நடராஜன், நகர இளைஞரணி அமைப்பாளர் மக்கள் க.அருள், ஏ.ரமேஷ். ஜாபர்அலி, வி.பி.பாலு, வ.சிவராமசேது உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். நகர துணைச் செயலாளர் பா.பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.