முகப்பு
தற்போதைய செய்திகள்

நெல்லை: குடிநீர் பிரச்னையை தீர்க்க கோரி மண்டல அலுவலகம் முற்றுகை

மேலப்பாளையத்தில் 10 ஆண்டுகளாக நிலவும் குடிநீர் பிரச்னையை தீர்க்க வேண்டும் என வலியுறுத்தி மாநகராட்சி மண்டல அலுவலகத்தை எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:14 AM
பகிர்:

மேலப்பாளையத்தில் 10 ஆண்டுகளாக நிலவும் குடிநீர் பிரச்னையை தீர்க்க வேண்டும் என வலியுறுத்தி மாநகராட்சி மண்டல அலுவலகத்தை எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.

மேலப்பாளையம் 38 வது வார்டில் ஹசரத்பிலால் தெருவில் 150 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வீட்டு குடிநீர் இணைப்புகளில், அதாவது பல வருடங்களுக்கு முன் வழங்கப்பட்ட பழைய குடிநீர் இணைப்புகளில் சீராக குடிநீர் கிடைக்கவில்லை என புகார் எழுந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக நிலவும் இப்பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டது.

இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் மண்டலக்குழுத் தலைவர் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. எனினும் ஹசரத்பிலால் தெருவில் வசிக்கும் மக்கள் குடிநீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்டு்ள்ளனர்.இதனிடையே இக்குடிநீர் பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் 100 க்கும் மேற்பட்டோர் திங்கள்கிழமை மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கட்சியின் மாவட்டத் தலைவர் சாகுல்ஹமீது, மாவட்டச் செயலர் ஹயாத்முகம்மது மற்றும் பொதுமக்கள், ஜமாத் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அவர்களிடம் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

முழு கட்டுரையைப் படிக்க →