முகப்பு
தற்போதைய செய்திகள்

மக்களவைத் தேர்தல்: நெல்லையில் பாஜகவினருக்கு சிறப்பு பயிற்சி முகாம்

மக்களவைத் தேர்தல் பணி குறித்து திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் கேந்திர பொறுப்பாளர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:15 AM
பகிர்:

மக்களவைத் தேர்தல் பணி குறித்து திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் கேந்திர பொறுப்பாளர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கட்சியின் திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், மேற்கு மாவட்டம் மற்றும் தூத்துக்குடி மாவட்டக் கேந்திரப் பொறுப்பாளர்களுக்கான மக்களவைத் தேர்தல் குறித்த பயிற்சி முகாம் பாளையங்கோட்டையில் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமிற்கு கட்சியின் மாநில அமைப்பு பொதுச் செயலர் எஸ். மோகன்ராஜூலு பயிற்சி முகாமினை தொடங்கி வைத்து பேசினார்.

தேர்தல் வியூகம்: மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கட்சியில் மாநகராட்சியில் வார்டுக்கு ஒரு கேந்திரப் பொறுப்பாளர், நகராட்சியில் 4 அல்லது 5 வார்டுகளுக்கு ஒரு கேந்திரப் பொறுப்பாளரும், பேரூராட்சிப் பகுதிகளில் 10 வாக்குச்சாவடிகளுக்கு ஒரு பொறுப்பாளரும், ஊராட்சிகளில் 4 முதல் 5 கிராம ஊராட்சிகளுக்கு ஒரு கேந்திரப் பொறுப்பாளர் என நியமனம் செய்யப்பட்டு்ள்ளது.

கேந்திர பொறுப்பாளர்கள் அவருக்கு வழங்கப்பட்ட பகுதியில் கட்சியின் அனைத்து நிர்வாகிகளை ஒருங்கிணைப்பது, 5 பெண்கள் உள்பட 15 பேர் கொண்டு பூத் கமிட்டி அமைப்பது, பூத் கமிட்டியில் ஒரு இளைஞர், ஒரு வழக்குரைஞர், ஒரு தகவல் தொழில்நுட்பம் பயின்றவர் இடம்பெறச் செய்வது.

அனைத்துக் கட்சி நிர்வாகிகளை தெரிந்திருக்க வேண்டும். அந்தந்த பகுதியில் பாரதிய ஜனதா, இந்து முன்னணி, விஸ்வஹிந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளில் உள்ள நிர்வாகிகள் பட்டியல் தயாரிப்பது போன்ற பணியில் ஈடுபடுவது குறித்து சிறப்பு முகாமில் பயிற்சி அளிக்கப்பட்டது.

கட்சியின், மாநில துணைத் தலைவர் சுரேந்திரன், கோட்டப் பொறுப்பாளர் எஸ்.வி. அன்புராஜ், கோட்ட அமைப்புச் செயலர் எஸ். கிருஷ்ணன், கோட்ட அமைப்பு துணைச் செயலர்கள் டி.ராஜா, எஸ்.வேல்பாண்டியன், நெல்லை கிழக்கு மாவட்டத் தலைவர் கட்டளை எஸ்.ஜோதி, மேற்கு மாவட்டத் தலைவர் எஸ். குமரேசசீனிவாசன்,

தூத்துக்குடி மாவட்டத் தலைவர் எம்.ஆர். கனகராஜ், மாவட்டச் செயலர் ஏ. வீரமணி, நெல்லை மக்களவைத் தொகுதிப் பொறுப்பாளர் மு. பாலசுப்பிரமணியன், தூத்துக்குடி தொகுதிப் பொறுப்பாளர் சந்தானக்குமார், நெல்லை கிழக்கு மாவட்ட அமைப்புச் செயலர் டி.வி. சுரேஷ், மாவட்டச் செயலர் பாலசுப்பிரமணியன் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →