தற்போதைய செய்திகள்

விருதுநகர் மாவட்டத்தில் நலிவடைந்த விளையாட்டு வீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு

விருதுநகர் மாவட்டத்தில் நலிவடைந்த விளையாட்டு வீரர்களிடம் இருந்து மாதம் ஓய்வூதியம் பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட விளையாட்டு அலுவலர்

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தில் நலிவடைந்த விளையாட்டு வீரர்களிடம் இருந்து மாதம் ஓய்வூதியம் பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட விளையாட்டு அலுவலர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் ராமசுப்பிரமணியராஜா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகம் முழுவதும் நலிவடைந்த சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தில் மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.

அந்த வகையில் இத்திட்டத்தில் உதவி பெறுவதற்கு ஒவ்வொரு விளையாட்டு வீரர்களும் குறிப்பிட்ட தகுதியை பெற்றிருக்க வேண்டும். இளவயது காலங்களில் சர்வதேச அளவு விளையாட்டு போட்டியில் பங்கேற்று முதல் மூன்று இடங்களை பெற்றிருக்க வேண்டும். முதியோருக்கான போட்டிகள் மற்றும் அழைப்பு போட்டியில் வெற்றி பெற்றவர்கள் இத்திட்டத்தில் உதவித் தொகை பெறுவதற்கு தகுதி கிடையாது. அதோடு, கடந்த ஏப்.2013ல் 58 வயது பூர்த்தி அடைந்தவராகவும் இருக்க வேணடும். அதோடு, மாத வருமானம் ரூ.6 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும். குறிப்பாக மத்திய, மாநில அரசில் ஓய்வூதியம் பெறுவோர், இத்திட்டத்தில் ஓய்வூதியம் பெற தகுதியில்லை.

எனவே இதற்கான படிவங்களை அந்தந்த மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலகத்தில் வழங்கப்படுகிறது. இதை வாங்கி பூர்த்தி செய்து பிப்-15ம் தேதிக்குள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட விளையாட்டு அலுவலர் ராமசுப்பிரமணியராஜா நலிவடைந்த விளையாட்டு வீரர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவள்ளூா் மாவட்டத்தில் 31.57 லட்சம் வாக்காளா்கள்

2,007 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா - முதல்வா் வழங்கினாா்

பத்ம விருதுக்கு தோ்வானவா்களுக்கு பாராட்டு

100 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

பாலியல் தொல்லை: அரசு மருத்துவமனை ஊழியா் கைது

SCROLL FOR NEXT