முகப்பு
தற்போதைய செய்திகள்

ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்

கோபி பகுதியில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையில் பொருட்களை பதுக்கி வைத்து வியாபாரிகள விற்பனை செய்து வருவதாக கோபி சார்ஆட்சியர் சந்திரசேகர் சாகமுரிக்கு புகார்கள்

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:15 AM
பகிர்:

கோபி பகுதியில் உள்ள கடைகளை உணவு, பாதுகாப்பு துறை அலுவலர்கள்  புதன்கிழமை திடீர் ஆய்வு செய்தனர்.

கோபி பகுதியில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையில் பொருட்களை பதுக்கி வைத்து வியாபாரிகள விற்பனை செய்து வருவதாக கோபி சார்ஆட்சியர் சந்திரசேகர் சாகமுரிக்கு புகார்கள் சென்றுளளன.

இதைத் தொடர்ந்து கடைகளில் அதிரடி, சோதனை நடத்துவதற்கு உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களுக்கு சார் ஆட்சியர் உத்தரவிட்டார்.கோபி மார்க்கெட் அருகே உள்ள வணிக வளாகத்தில் உள்ள 8 கடைகள் மற்றும் குடோன்களில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் புதன்கிழமை காலை திடீர் சோதனை மேற்கொண்டனர். காலை 5 மணி முதல் 7 மணி வரை சுமார் 2 மணி நேரம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான குட்கா, பான்பராக், ஹானஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை அதிகாரிகள் கண்டு பிடித்தனர்.

புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு மொத்தமாக, சில்லறை வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் கோபி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள வியாபாரிகள் இங்கு வந்து புகையிலை பொருட்களை வாங்கி செல்வதும் அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது.

சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மாவட்ட உணவு பாதுகாப்பு  நியமன அலுவலர் கருணாநிதி, பாதுகாப்பு அலுவலர்கள் மனோகரன், முருகேசன், மணி, குழன்தைவேலு, செல்வன், சீனிவாசன் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →