முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரத்தில் 25வது ஆண்டு மலர் கண்காட்சி பிப்.2-ல் தொடக்கம்

கண்காட்சியில் மணமுள்ள அனைத்து வகை ரோஜா செடிகள், ஏராளமான ஒட்டு ரகப்பழ மரக்கன்றுகள், மர வேலைக்கான மரக்கன்றுகள், இறைவழி பாட்டிற்கான அனைத்து செடிகள், அழகுச் செடிகள், மூலிகை

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:17 AM
பகிர்:

சிதம்பரம் மாரியப்பாநகரில் உள்ள ராதா நர்சரி கார்டனில் 25-வது ஆண்டு வெள்ளி விழா மலர்கண்காட்சி பிப்ரவரி 2-ம் தேதி முதல் தொடங்கி மார்ச் 2-ம் தேதி வரை நடைபெறுகிறது.

கண்காட்சியில் மணமுள்ள அனைத்து வகை ரோஜா செடிகள், ஏராளமான ஒட்டு ரகப்பழ மரக்கன்றுகள், மர வேலைக்கான மரக்கன்றுகள், இறைவழி பாட்டிற்கான அனைத்து செடிகள், அழகுச் செடிகள், மூலிகை வகை செடிகள், வாஸ்து செடிகள், இயற்கை உரங்கள், தோட்டக்கருவிகள் அனைத்து விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. தினமும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை கண்காட்சி நடைபெறுகிறது. விற்பனையில் 10 சதவீத தள்ளுபடியும் உண்டு. கண்காட்சித்தான ஏற்பாடுகளை அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்துறை முன்னாள் பேராசிரியர் ஆர்.எம்.நாச்சியப்பன், என்.ராதா ஆகியோர் செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.