பைக் மீது பேருந்து மோதல்: கணவர் சாவு,மனைவி படுகாயம்
:திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே பைக்கில் மனைவியுடன் சென்ற முன்னாள் தலைமையாசிரியர் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் தலைமையாசிரியர் வியாழக்கிழமை
:திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே பைக்கில் மனைவியுடன் சென்ற முன்னாள் தலைமையாசிரியர் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் தலைமையாசிரியர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.மனைவி படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
துறையூர் ஹவுஸிங்யூனிட்டைச் சேர்ந்தவர் பெரியசாமி (64). ஒய்வு பெற்ற தலைமையாசிரியரான இவர் தனது முன்னோருக்கு திதி கொடுப்பதற்காக தனது மனைவி மரகதம்(55) ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிள் மூலம் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சென்றுகொண்டிருந்தனர். மண்ணச்சநல்லூர் அருகே உள்ள ஆற்றுப்பாலத்தினை கடந்து வந்த போது வைக்கோல் ஏற்றிக் கொண்டு சென்ற மாட்டு வண்டியினை முந்தி கடந்து சென்ற போது எதிரே வாகனம் வந்துள்ளது.
இதனால் மோட்டார் சைக்கிளின் வேகத்தினை குறைத்த போது பின்னால் துறையிலிருந்து திருச்சி நோக்கி வந்த தனியார் பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் பெரியசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த மரகதம் மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் முதலுதவிப் பெற்று, திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இந்த விபத்து தொடர்பாக மண்ணச்சநல்லூர் போலீஸார் வழக்கு பதிந்து, பேருந்து டிரைவர் முசிறி கருப்பம்பட்டியைச் சேர்ந்த சுதாகர் (28) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.