முகப்பு
தற்போதைய செய்திகள்

திருக்குறுங்குடி காவல் நிலையத்தில் தீ விபத்து: வாகனங்கள் எரிந்து சேதம்

திருக்குறுங்குடி காவல் நிலைய வளாகத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய மோட்டார் சைக்கிள்கள், வேன் போன்ற பல்வேறு வாகனங்களும், சைக்கிள்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. பல

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:45 AM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி காவல் நிலையத்தில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த தீ விபத்தில் அங்கிருந்த மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன.

திருக்குறுங்குடி காவல் நிலைய வளாகத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய மோட்டார் சைக்கிள்கள், வேன் போன்ற பல்வேறு வாகனங்களும், சைக்கிள்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. பல வருடங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த வாகனங்கள் உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

புதன்கிழமை அதிகாலையில் திடீரென காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தியிருந்த வாகனங்கள் தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்த நான்குனேரி தீயணைப்பு படையினர் விரைந்து தீயை அணைத்தனர். எனினும் இந்த விபத்தில் 10 மோட்டார் சைக்கிள்கள், 9 சைக்கிள்களும் முழுமையாக எரிந்து சேதமடைந்தன. தீ விபத்து குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே திருநெல்வேலி காவல்சரக துணைத் தலைவர் சுமித்சரண், எஸ்.பி. நரேந்திரன்நாயர் ஆகியோர் திருக்குறுங்குடி காவல் நிலையத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

முழு கட்டுரையைப் படிக்க →